இந்த ஆண்டு மெல்லிசை மன்னருக்கு இன்னொரு சிறப்பான ஆண்டாக அமைந்தது.
எம்ஜியார் அவர்களுக்கு ஒரே ஒரு படத்திற்கு இசை அமைத்தாலும், அது மறக்க முடியாத ஒன்றாக அமைந்து விட்டது. அந்த படத்திற்கு அவர் முதலில் இசை அமைக்க ஒப்பந்தம் செய்யப்படவில்லை. பின்னர் அதையொட்டி நடந்த சில பிரச்னைகள், மனத்தாங்கல்களையும் தாண்டி ஒரு கலைஞன் என்பவன் எப்படி பட்ட சூழ்நிலையிலும் தன்னுடைய அர்ப்பணிப்பை சிறிதும் குறை வைக்காமல் அளிக்கிறான் என்பதற்கு ஒரு அடையாளமாக அமைந்து விட்டது அந்த பட பாடல்கள்.
கண்டு பிடித்து விட்டீர்களா ? 'உலகம் சுற்றும் வாலிபன்'
ஆஹா என்ன ஒரு அபாரமான இசை தொகுப்பு. எந்த பாடலை சொல்வது எதை விடுவது.
இப்பட பாடல்களை அனுபவித்து ஒரு தனி பதிவே எழுதலாம். அருமையான இசை கோர்வைகள், வாத்தியங்களை கையாளும் விதம், bansaayee பாடலை ஈஸ்வரி பாடும் விதம், மற்றும் விசில் , இளம் பாலுவின் நவரச நாடகம், தாசேடனின் 'தங்க தோணியிலே' கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் அவர்களின் பாடல் வரிகள்....இன்னும் காதில் ஒலித்து கொண்டிருக்கிறது.
இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் வந்த 'அலைகள்' மற்றும் இயக்குநர் ஏ ஜெகநாதன் அவர்களின் முதல் இயக்கமான 'மணிப்பயல்' இரண்டிலும் அருமையான பாடல்களை தந்தார் மன்னர்.
இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை பாடகர் பி ஜெயச்சந்திரன் 'மணிப்பயல்' படம் மூலம் தமிழுக்கு வந்தார்.
அலைகள் படத்தில் அவரின் இனிமையான பாடல் இங்கே.
மணிப்பயல் படத்தில் வந்த இன்னொரு பிரபலமான (அரசியல் இயக்கத்துக்கும்) பாடல் புலமைப்பித்தன் அவர்கள் எழுதி சீர்காழி மற்றும் ஈஸ்வரி அவர்களின் குரலில் ஓங்கி ஒலித்த.
'காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்'
அரங்கேற்றம் திரைப்படத்திற்கு பிறகு அந்த வருடம் கே பாலசந்தர் இயக்கிய இன்னொரு முக்கியமான திரைப்படம் ' சொல்லத்தான் நினைக்கிறேன்' படத்தில் அமைந்த அத்தனை பாடல்களும் சிறப்பு
பாலு ஈஸ்வரி ஜோடியில் ' கல்யாணம் கச்சேரி' மன்னரே பாடி ஹிட் அடித்த 'சொல்லத்தான் நினைக்கிறன்'
ஜானகி சுசீலா இணையும் , வாலி வரிகளில் 'பல்லவி ஒன்று மன்னன் கேட்க பாடுவேனடி' வாணி குரலில் ' மலர் போல் சிரிப்பது'
அருமையான துள்ளிசை இந்த பாடல் ஈஸ்வரி அம்மாவின் குரலில் 'வாயாடி' படத்திற்காக.
ஜெய் லட்சுமி ஜோடியில் நிறைய ஹிட் பாடல்கள் வந்துள்ளன. அந்த வகையில் இவ்வருடம் வந்த இந்த மெலடி, பாலு சுசீலா அம்மா குரலில், திரைப்படம் 'தலை பிரசவம்'
மு க முத்து 'பிள்ளையோ பிள்ளை' படத்திற்கு பிறகு நடித்த படம் 'பூக்காரி'. மூன்றே மூன்று பாடல்கள். முத்துக்கள் மூன்று !
ஈஸ்வரி அவர்களின் குரலில் 'முப்பது பைசா மூணு முழம் முல்லை மல்லிகை கனகாம்பரம்' துள்ளிசையாக தவில் துணையுடன் வரும் ' முத்துப்பல் சிரிப்பென்னவோ' மகுடம் இட்டார் போல், அன்றும் இன்றும் என்றும் எல்லோரையும் மயங்க வைக்கும் ' காதலின் பொன் வீதியில்'. இப்பாடலை பற்றி என்ன சொல்வது. மன்னர் உச்ச நடிகர்கள், பெரிய தயாரிப்பாளர்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் எல்லோருக்கும் அள்ளி வழங்கியுள்ளார்
ஆரம்பத்தில் ஜானகியின் ஹம்மிங், டி எம் எஸ் அவரை பின்தொடர, பாடல் முழுக்க தாளக்கட்டில் வரும் அந்த மோர்சிங், இசை கோர்வைகள் , its an ecstasy !
இரவு நேரத்தில் இப்பாடலை கேட்டு பாருங்கள், அந்த உணர்வை விவரிக்க இயலாது
சிவாஜி மன்னர் கூட்டணி இவ்வருடமும் களை காட்டியது. கெளரவம், பாரத விலாஸ்,பொன்னூஞ்சல், ராஜபார்ட் ரங்கதுரை என்று ஹிட் மேல் ஹிட் கொடுத்தனர்.
'மதன மாளிகை'க்கு இன்னும் கட்டுண்டவர் நாமெல்லாம் அல்லவா. தொடக்கத்தில் டி எம் எஸ் அவர்களின் பல்லவியை தொடர்ந்து சுசீலா 'அன்பே அன்பே அன்பே' என்று தொடர அதை தொடரும் அந்த இசை கோர்வை..ஆஹா
கண்ணதாசன் படம் முழுக்க வியாபித்து இருப்பர் தன வரிகள் மூலம்.
'பொன்னூஞ்சலில்' வரும் இப்பாடலின் முகப்பு இசைக்கு மயங்காதவர்கள் உண்டோ ? அருமையான மத்யமாவதி
'நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்' தாலாட்டு போல் அமைந்த மெட்டு, மெல்லிய சோகம் இழைந்தோடும் கூர்ந்து கவனித்தால்.சுசீலா அவர்கள்அசத்தி இருப்பார், 'முத்து பிள்ளைகளே முத்து பிள்ளைகளே' என்று அனுபல்லவியில் பாடும் இடத்தில.
'கெளரவம்'
கண்ணதாசன் தன் பாடல் வரிகள் மூலமாகவே கதையை சொல்லும் ' கண்ணா நீயும் நானுமா' 'பாலூட்டி வளர்த்த கிளி' குழலுடன் இணையும் பாலு சுசீலா அம்மா அவர்களின் ' யமுனா நதி இங்கே' பியானோ உருகும் 'மெழுகுவர்த்தி எரிகின்றது' ஈஸ்வரி 'அதிசய உலகம்' என்று துள்ளிசைக்க.. எதை விடுவது. அற்புதமான இசை தொகுப்பு இத்திரைப்பட பாடல்கள்.
முக்தா இயக்கத்தில் வந்த 'சூரியகாந்தி'. ஜெ மற்றும் முத்துராமன் நடிப்பில் வெற்றி பெற்றது.
ஜெவின் மறுபக்கம் ஒரு திறமையான பின்னணி பாடகி. அவர் பாடிய பாடல்கள் சொற்பமே ஆனாலும் அத்தனையும் சிறப்பானவை. இப்படத்தில் அவர் இரு பாடல்களும் மிக சிறப்பு வாய்ந்தவை.
பாலுவுடன் சேர்ந்து 'நான் என்றால் அது நானும் அவளும்' டி எம் எஸ் அவர்களுடன் பாடும் 'ஓ மேரி தில்ருபா ' அருமையாக பாடி இருப்பர். மன்னரின் மெட்டுக்கும் இசை கோர்வைகளுக்கும் கேட்கவா வேண்டும்.
மனோரமா எனும் இன்னொரு அற்புத பின்னணி பாடகி, ஆமாம் ஆச்சி அவர்கள் தான். 'தெரியாதோ நோக்கு தெரியாதோ' என்று கலக்கி இருப்பார்.
படத்தில் முத்தாய்ப்பாக வரும் 'பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது' கண்ணதாசன் திரையில் தோன்றி பாடிய இப்பாடல் இன்றளவும் மிக பிரபலம்.
பி ஆர் பந்துலு இயக்கத்தில் வந்த 'கங்கை கௌரி' திரைப்படத்தில் வந்த அருமையான பாடல்கள்.
பாகேஸ்ரீ ராகத்தில் அமைந்த 'அந்தரங்கம் நானறிவேன்'
ஜானகியின் அம்ருதவர்ஷினி
டி எம் எஸ் குரலில் 'பிச்சாண்டி தன்னை கண்டு பிச்சை இடுங்கள்'
இவ்வாண்டிலும் அருமையான பாடல்கள் வந்த தமிழ் திரை உலகில்.
வரும் பதிவுகளில் இன்னும் நிறைய பார்ப்போம். அது வரை குறிப்பிட்ட பாடல்களை கேட்டு மகிழுங்கள்.
No comments:
Post a Comment