'சிவாஜி ஓவர் ஆக்ட்டிங், மெல்லிசை மன்னர் ஒரே தாளக்கட்டுல 'பாங்கோஸ்' மட்டும்தான் உபயோகித்து இசை அமைச்சுருக்கார், சுசீலாம்மாவுக்கு மெலடி பாடல்கள் மட்டும் தான் வரும், ஆரம்ப 70களின் தமிழ் திரைப்பட இசை ரொம்ப மோசமா இருந்தது, ஹிந்தி பாடல்கள் தமிழ் திரை பாடல்களை ஓரம் கட்டின'
நீங்க இணையத்துல அடிக்கடி இந்த மாதிரி அற்புத கருத்துக்களை பார்த்து இருக்கலாம். தங்களுக்குஒருவரை பிடிக்கும் என்பதற்காக வேறு இசை கலைஞர்கள் மேல் இந்த மாதிரியான பழிப்புகள் அரங்கேறுகின்றன.
இந்த வகையில் மற்றொன்று 'கேவிஎம் ' அவர்கள் கர்நாடக ரக பாடல்களில் தான் அறியப்படுகிறார். எத்தனை அபத்தமான கருத்து இது? இவர்களிடம் அவர் இசை அமைத்த படங்களை சொல்லுங்கள் என்றால், சங்கராபரணம், திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் என்று மட்டுமே கூறுகிறார்கள் :-). இவர்கள் மாமா அவர்களின் இசையை கேட்டதில்லை. ஒருவருடைய இசையை முழுமையா கேட்காமல், 75க்கு முன்னாள் வந்த பாடல்களில் aesthetics இல்லை என்று கூறுவது எவ்வளவு மடத்தனம்.
அப்படி என்றால் மாமா அவர்கள் மொத்தமாக அவர் இசை அமைத்த பாடல்கள் எல்லாம் கர்நாடக இசை வகையை சார்ந்தது தானா?
இவர்கள் கீழ்கண்ட மெலடி பாடல்களை அறிவார்களா?
பேசும் தெய்வம் - நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்
வானம்பாடி - எட்டில் எழுதி வைத்தேன் எழுதியதை சொல்லி வைத்தேன்
தூக்கணாங் குருவி கூடு, யாரடி வந்தார் என்னடி சொன்னார்
இதய கமலம் - தோள் கண்டேன் தோளே கண்டேன், என்னதான் ரகசியமோ இதயத்திலே
சுசீலாவின் அபாரமான 'மலர்கள் நனைந்தன பனியாலே'
தொழிலாளி - ஆண்டவன் உலகத்தின் முதலாளி
தனிப்பிறவி - ஒரே முறை தான் உன்னோடு பேசி பார்த்தேன்
எங்கள் தங்க ராஜா - இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
தாயை காத்த தனயன் - காட்டு ராணி கோட்டையிலே, மூடி திறந்த இமை இரண்டும்
தேவர், புரட்சி தலைவர் கூட்டணியில் 15 / 16 படங்கள் இசை அமைச்சுருக்கார். இது எல்லாம் கர்நாடக ரகங்களை சார்ந்ததா?
தெலுங்கில் நிறைய படங்கள் செய்துள்ளார். இசை சார்ந்த கே விஸ்வநாத் படங்களை தவிர்த்தும் கூட.
இந்த பாடலை கேட்டு விட்டு சொல்லுங்கள் 'ஜனனி ஜன்மபூமி ' என்ற படத்தில்
இதையொட்டி ஒரு இழை எழுத வேண்டும் என்று தோன்ற காரணம் ஆரம்பத்தில் சொன்ன கட்டுக்கதைகள் தான்.
70களின் இழை முடிந்தவுடன் இதை ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன், தங்களின் ஆதரவோடு.
No comments:
Post a Comment