Friday, November 18, 2011

முகநூல் இணைப்புகள்

முகநூல் ஒரு அருமையான இணைப்பு வட்டம் என்பதை மறுபடியும் நிருபித்தது. எத்தனை அருமையான அன்புமிக்க மனிதர்களுடன் என்னை இணைதிருக்கிறது என்பதற்கு சிறந்த அடையாளகம எழுத்தாளர் முருகானந்தம்,எழுத்தாளர் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் ஆகியோரை நேரில் சந்தித்து அளவளாவும் பாக்யம் கொடுத்து இருக்கிறது. எழுத்தாளர் முருகானந்தம் அவர்களின் அன்புக்கு நான் என்றும் கடமை பட்டு இருக்கிறேன். இந்த பட்டியலில் முக நூலில் என் அண்ணா திருவாளர் சேஷாத்ரி நாராயணன் அவர்களையும் சந்திக்க வைத்தது. நமக்கு பிடித்த சில விஷயங்களை நமக்கு பிடிதவர்குளுடன் சேர்ந்து செய்யும் பொழுது கிடைக்கும் ஆனந்தம் அளவில்லாதது. அவ்வாறே சேஷாத்ரி நாராயணன் அவர்களுடன் திருபதி
பயணம் இறைவன் தரிசனம் ஆனந்தம் ஆனந்தம். அண்ணா உங்கள் அன்புக்கு என்றும் அடிபணிய ஆசை. அடுத்து என் அன்பு பட்டியலில் இருக்கும் ஆன்றோர் சான்றோர்கள் திருவளர்கள் கிருஷ்ணமுர்த்தி கிருஷ்ணையர், ஓவிய மேதை ஜீவா நந்தன் மற்றும் சமய சஞ்சீவி எஸ் எச்செஸ் பீ. இவர்களை சந்திக்கும் தருணத்துக்காக காத்து இருக்கிறேன்.

எப்போ வருவரோ எந்தன் கலி தீர்க்க

Saturday, October 29, 2011

அன்பின் எல்லை

அன்பின் எல்லை என்று ஒரு நாவல் நான் சிறு வயதில் படித்தது.மிகவும் விரும்பி பல முறை படித்த ஒன்று. எழுதியவர் த நா குமாரசுவாமி அவர்கள். மிகவும் எளிமையான நடையில் அன்றைய கல்யாண வைபோகங்களை பற்றியும் முதன் முறையாக ஒரு புது பெண் அவள் புகுந்த வீட்டுக்கு போகும் பொழுது எதிர் கொள்ளும் புதிய நிகழ்வுகள் ஒவ்வாமை முதலியவை பற்றி அருமையாக வர்ணிக்கபட்டு இருக்கும். சுந்தரராமன்,சீதா கதாபாத்திரங்கள் இன்னும் என் மனதை விட்டு நீங்காதவை.அன்றைய காலகட்டத்தில் புகுந்த வீட்டில் ஒரு பெண்ணுக்கு எத்தனை சுதந்திரம் இருந்தது,மூன்று நாட்கள் நடக்கும் கல்யாண வைபோகங்கள் போன்றவற்றை அருமையாக விவரித்து இருப்பார் நாவலாசிரியர். அந்த புத்தகம் இன்றும் தேடுகிறேன் கிடைக்கவில்லை, யாரவது முயற்சி செய்து கிடைக்கும்படி செய்யவும்.

கதைக்கு தக்கவாறு அழகான ஓவியங்கள் வரைந்த ஓவியரின் பெயர் நினைவில்லை.

Friday, October 28, 2011

ஒவ்வாமை



உலகத்தில் ஒவ்வாமை நிறைய உண்டு. நம் வாழ்க்கையில் ஒவ்வாமை வரும் தருணங்கள் உடல் ஒவ்வாமை. அது வந்தால் உடன் மருத்துவரிடம் சென்று மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு விட்டு என்ன விதமான உணவுகள் நமக்கு ஒவ்வாமை என்று தெரிந்து கொண்டு அதை எல்லாம் விளக்க முயல்கிறோம். இதையே வாழ்க்கையில் நம் துணை வருபவளிடமோ,கூட பிறந்தவர்களிடமோ இல்லை மற்ற உறவினர்களிடமோ வந்தால் நாம் உடனே ஏன் அதை ஊதி பெரிதாக்கி சண்டை இட்டு கொள்கிறோம். நம் உடலுக்கு என்று வரும் பொழுது வரும் அந்த சுயநலம், நம் உடல் நன்றாக இருக்க வேண்டும் என்று இருக்கும் நினைப்பு ஏன் இந்த தருணங்களில் வருவதில்லை? இந்த ஒவ்வாமைகளையும் இப்படி ஒரு மருத்துவ ரீதியில் கணித்து களைய முற்பட்டால், எதனை சண்டை சச்சரவுகள்,மன வருத்தங்கள், கணவன் மனைவிக்குள்ளே வரும் கோப தாபங்கள் தவிர்க்க முடியும். என் பார்வையில், முக்கால்வாசி விவாகரத்து விவகாரங்கள் ஒவ்வாமை என்று பட்டியலட்பட்டு இரண்டு பெரும் விலகுகிறார்கள்.