Friday, March 26, 2021

K V Mahadevan - The Legend

 'சிவாஜி ஓவர் ஆக்ட்டிங், மெல்லிசை மன்னர் ஒரே தாளக்கட்டுல 'பாங்கோஸ்' மட்டும்தான் உபயோகித்து  இசை அமைச்சுருக்கார், சுசீலாம்மாவுக்கு மெலடி பாடல்கள் மட்டும் தான் வரும், ஆரம்ப 70களின் தமிழ் திரைப்பட இசை ரொம்ப மோசமா இருந்தது, ஹிந்தி பாடல்கள் தமிழ் திரை பாடல்களை ஓரம் கட்டின'

நீங்க இணையத்துல அடிக்கடி இந்த மாதிரி அற்புத கருத்துக்களை பார்த்து இருக்கலாம். தங்களுக்குஒருவரை பிடிக்கும் என்பதற்காக வேறு இசை கலைஞர்கள் மேல்  இந்த மாதிரியான பழிப்புகள் அரங்கேறுகின்றன. 

இந்த வகையில் மற்றொன்று 'கேவிஎம் ' அவர்கள் கர்நாடக ரக பாடல்களில் தான் அறியப்படுகிறார். எத்தனை அபத்தமான கருத்து இது? இவர்களிடம் அவர் இசை அமைத்த படங்களை சொல்லுங்கள் என்றால், சங்கராபரணம், திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் என்று மட்டுமே கூறுகிறார்கள் :-). இவர்கள் மாமா அவர்களின் இசையை கேட்டதில்லை. ஒருவருடைய இசையை முழுமையா கேட்காமல், 75க்கு முன்னாள் வந்த பாடல்களில் aesthetics இல்லை என்று கூறுவது எவ்வளவு மடத்தனம். 

அப்படி என்றால் மாமா அவர்கள் மொத்தமாக அவர் இசை அமைத்த பாடல்கள் எல்லாம் கர்நாடக இசை வகையை சார்ந்தது தானா? 

இவர்கள் கீழ்கண்ட மெலடி பாடல்களை அறிவார்களா?

பேசும் தெய்வம் - நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம் 

வானம்பாடி - எட்டில் எழுதி வைத்தேன் எழுதியதை சொல்லி வைத்தேன் 

தூக்கணாங் குருவி கூடு, யாரடி வந்தார் என்னடி சொன்னார் 

இதய கமலம் - தோள் கண்டேன் தோளே கண்டேன், என்னதான் ரகசியமோ இதயத்திலே 

சுசீலாவின் அபாரமான 'மலர்கள் நனைந்தன பனியாலே'

தொழிலாளி - ஆண்டவன் உலகத்தின் முதலாளி 

தனிப்பிறவி - ஒரே முறை தான் உன்னோடு பேசி பார்த்தேன் 

எங்கள் தங்க ராஜா - இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை 

தாயை காத்த தனயன் - காட்டு ராணி கோட்டையிலே, மூடி திறந்த இமை இரண்டும் 

தேவர், புரட்சி தலைவர் கூட்டணியில் 15 / 16 படங்கள் இசை அமைச்சுருக்கார். இது எல்லாம் கர்நாடக ரகங்களை சார்ந்ததா?

தெலுங்கில் நிறைய படங்கள் செய்துள்ளார். இசை சார்ந்த கே விஸ்வநாத் படங்களை தவிர்த்தும் கூட.

இந்த பாடலை கேட்டு விட்டு சொல்லுங்கள் 'ஜனனி ஜன்மபூமி ' என்ற படத்தில் 

https://youtu.be/nhubCfq_fao

இதையொட்டி ஒரு இழை எழுத வேண்டும் என்று தோன்ற காரணம் ஆரம்பத்தில் சொன்ன கட்டுக்கதைகள் தான். 

70களின் இழை முடிந்தவுடன் இதை ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன், தங்களின்  ஆதரவோடு.


Tuesday, March 23, 2021

A myth about early 70s Tamil Film Music - VIII (Year 1974) - Part I

 தமிழ் திரை இசையை பொறுத்தவரை இந்த ஆண்டும் ஒரு இனிமையான ஆண்டாக அமைந்தது தமிழ் திரைப்பாடல்களை பொறுத்த வரையில். மன்னரின் ராஜ்யம் தொடர்ந்தாலும் பிற இசை அமைப்பாளர்களும்  களம் கண்டு வெற்றிபெற்றனர். வி குமார் அவர்கள் 8 முதல் 10 படங்களுக்கு இசை அமைத்தார். விஜய பாஸ்கர் அவர்களும் இரண்டே படங்களுக்கு இசை அமைத்தாலும் அவை மூலம் தமிழ் இசை ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார். 'முருகா வடிவேலா உன்னை அறிவேன் தெய்வபாலா' 'ஏறுதம்மா ஏறுதம்மா இறக்கை கட்டி ஓடுதம்மா விலைகள் ' ஜி கே வெங்கடேஷ் இசை அமைத்த 'முருகன் காட்டிய வழி'. இசை இரட்டையர்கள் சங்கர் கணேஷ் 'வெள்ளிக்கிழமை விரதம்' படத்திற்காக கொடுத்த 'தீம் ம்யூசிக் ' பல தேவர் படங்களுக்கு முன்னோடியாக அமைந்தது. ஒரே ஒரு படம் இசை அமைத்தாலும் ''வைரமாக' மின்னிய 'இரு மாங்கனி போல் இதழோரம்' ஜெ அவர்களில் இனிய குரலில், டி ஆர் பாப்பா அவர்கள். இவர்களை தவிர வீணை கலைஞர் இசையில் மூதறிஞர்  ராஜாஜி அவர்களின் 'திக்கற்ற பார்வதி' வாணி அவர்களின் குரலில் ' ஆகாயம் மழை பொழிந்தால்' . 'எழுதி எழுதி பழகி வந்தேன்' குன்னக்குடியார் இசையில் குமாஸ்தாவின் மகள் படத்திற்காக. கே வி மஹாதேவன் அவர்கள் இரண்டொரு படத்திற்கு மட்டும் இசை அமைத்தார். வாணி ராணி படத்தில் வரும் 'முல்லை பூ பல்லக்கு போவதெங்கே'. சூலமங்கலம் சஹோதரிகள் இசையில் வந்த 'டைகர் தாத்தாச்சாரியார்' படத்தில் 'ஏழுமலை வாசா வெங்கடேசா'. 

குமாஸ்தாவின் மகள் 

https://youtu.be/Xwudk1QbCAc

திக்கற்ற பார்வதி 

 https://youtu.be/az4vA5VRRtg

வைரம் 

https://youtu.be/x6CE81oIMFM

முருகன் காட்டிய வழி 

https://youtu.be/S81b6yjMk2k

ghttps://youtu.be/42ETlDWcJ6g

வெள்ளிக்கிழமை விரதம் 

https://youtu.be/7yf_eJAPQJo

https://youtu.be/kEz09v7wPxI

டைகர் தாத்தாச்சாரியார் 

https://youtu.be/c3PdRpnkU_Q

வாணி ராணி 

https://youtu.be/eGiZyjG5BN4

https://youtu.be/iSk4RyYkTaw

அப்பா அம்மா - ஷியாம் அவர்கள் இசையில் 

https://youtu.be/NhHKiS9CxUU

பின்னணி பாடகியரை பொறுத்த வரை இந்த ஆண்டு ஒரு இனிய திருப்பமாக இருந்தது. கலைவாணியின் அருள் பெற்ற திருமதி வாணி ஜெயராம் அவர்களின் 'மல்லிகை என் மன்னன் மயங்கும்' அவர் மன்னனை மட்டுமில்லாமல் அனைத்து இசை உள்ளங்களையும் கொள்ளை கொண்டது. அன்று தொடங்கிய அந்த மல்லிகையின் மணம் வெகு காலத்திற்கு தமிழ் திரை இசை உலகை ஆட்கொண்டது. 

73ஆம்  ஆண்டில் உலகம் சுற்றும் வாலிபன் எனும் ஒரே ஒரு பெரிய இசை வெற்றியை கொடுத்த எம்ஜீயார் அவர்கள் இந்த ஆண்டு  3 ஹிட் படங்களை கொடுத்தார். மூன்று படங்களின் பாடல்களும் பெரும் வெற்றியை ஈட்டின. 

அடுத்த பகுதியில் வாணி, எம்ஜீயார், நடிகர் திலகம் ,வி குமார் மற்றும் மன்னர் கொடுத்த இசையை பற்றி காண்போம். அதுவரை மேலே குறிப்பிட்ட பாடல்களை கேட்டு ரசியுங்கள். 

Saturday, March 20, 2021

இசை அமைப்பாளர் ஷியாம் பிறந்த நாள்

நேற்று, மார்ச் 19 ,  இசை அமைப்பாளர் சாமுவேல் ஜோசப் என்கிற ஷியாம் அவர்களின் 84வது பிறந்த நாள். 

கடந்த பத்து  நாட்களாக மனம் ஒரு நிலையில்லை. குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு மரணம் அதையொட்டிய மனதளர்வுகளுடன் சில உடல் தளர்வுகளும் நிரம்ப உளைச்சலை கொடுத்தன. இன்னும் அந்த மன  இறுக்கத்திலிருந்து  மீளவில்லை என்றாலும் 'இதுவும் கடந்து போகும்' எனும் சொல்லுக்கு ஏற்ப இசை மட்டுமே இந்த இறுக்கத்திலிருந்து விடுபட  வல்லமை பெற்றது.

நேற்று இரவு பாடகர் கிருஷ்ண சந்திரன் அவர்கள் தன்  முகநூலில் ஒரு பாடலை பதிவிட்டு இருந்தார். 

https://m.facebook.com/story.php?story_fbid=10216271268133337&id=1802328314

இரவின் மடியில் ஷியாம் தந்த சில அருமையான பாடல்களை கேட்டு உறங்க சென்றேன். அவற்றில்  சிலவற்றை இங்கே உங்களுக்காக பகிர விரும்புகிறேன். 70 இறுதியிலும் 80களின் ஆரம்பத்தில் அவர் தமிழில், ஒரு 10 அல்லது 12 படங்களே செய்து இருந்தாலும், அவர் கொடுத்த பாடல்கள் தனித்து நின்றன.

இயக்குநர் மௌலி அவர்களுடன் கைகோர்த்து ஒரு 4 அல்லது 5 படங்களுக்கு இசை அமைத்தார். 

'பூந்த மல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே' என்று  கருந்தேள் கண்ணாயிரம் மூலம் தமிழுக்கு அறிமுகம், அந்த படத்தில் அவர் கொடுத்த மெலடி பாலு சுசீலாவுடன் சேர்ந்து 

https://youtu.be/LBehx8_I9IA

1978 தீபாவளி திரைப்பட வெளியீட்டுக்களை பொறுத்தவரை ஒரு அட்டகாச தீபாவளி. 12 படங்கள் வெளி வந்தன. கமல் நான்கு  படங்கள் 'சிகப்பு ரோஜாக்கள்' 'தப்பு தாளங்கள்,அவள் அப்படிதான்' 'மனிதரில் இத்தனை நிறங்களா ' ரஜினி ' தாய் மீது சத்தியம்' 'அவள் அப்படிதான்' தப்பு தாளங்கள்' சிவாஜி 'பைலட் ப்ரேமத்' சிவகுமார் 'கண்ணாமூச்சி' ஜெய்ஷ்ங்கர் 'வண்டிக்காரன் மகன்'. இன்றைய கால கட்டங்களில் இதை எல்லாம் நினைத்து கூட பார்க்க முடியாது. 

'மழை தருமோ என் மேகம்' என்று இன்று உருக வைக்கும் மெலடி 'மனிதரில் இத்தனை நிறங்களா ' படத்தில் ஷியாம் அவர்கள் இசையில். சைலஜா  அவர்களின் ஹம்மிங் வேறு உலகத்துக்கு இட்டு செல்லும் இந்த பாடலில். பாலுவின் ஆரம்ப ஹம்மிங் மற்றும் அந்த மணிஓசையுடன் முகப்பு இசை :-)

https://youtu.be/eEaexI60o6s

ஜானகி மற்றும் வாணி ஜெயராம் அவர்கள் குரலில் இன்னொரு அருமையான பாடல் இப்படத்தில் 'பொன்னே பூமியடி "

https://youtu.be/gK1s7EKX98Q

ஜெய்கணேஷ் நடிப்பில் வெளிவந்த இந்த பாடல் 'தேவதை' படத்திற்காக.. வானொலி காலங்களில் மிக பிரபலம்.

https://youtu.be/hHluJxdwckk

இந்த படம் அக்காலத்தில் எங்கள் குழுவில் மிகவும் பிரபலம்  :-). கழுதைக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் இப்படத்தில் 

இப்படத்திலும் அருமையான பாடல்களை கொடுத்தார் ஷியாம் அவர்கள்.

https://youtu.be/bwCAIViReug

https://youtu.be/sRMpfxi1e0g 

https://youtu.be/qZAOU0wYpyU

மௌலியுடன் இணைந்த முதல் படம் 'மற்றவை நேரில்'. 

ஜானகி அவர்களின் தேன் குரலில் ஒலிக்கும் 

https://youtu.be/QPaxoaILyJY

'கள் வடியும் பூக்கள்' வந்த இந்த இரண்டு அருமையான பாடல்கள். இன்னொரு வானொலி தந்த வரங்கள் அக்காலத்தில்.

கான காந்தர்வன் குரலில் 

https://youtu.be/V3METd1W3Vg

https://youtu.be/x3NPuxEH6tw

பாலுவின் மெலடி 'வானம் பன்னீரை தூவும்' 

https://youtu.be/WYOrbNxYUk4

'வா இந்த பக்கம்' தீபன் அவர்களில் சிறப்பான பாடல் என்னை பொறுத்தவரை.

ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் அவர்கள் முதல் படம் என்றும் நினைக்கிறேன்

அந்த அமர்க்களமான முகப்பு இசை மணி ஓசையுடன்...ஆஹா இதல்லவா சொர்க்கம் 

வளைக்கரம் வளைக்கையில் 

நாணம் போகுதே 

https://youtu.be/drpfW7YttrQ

அந்த ஆரம்ப வயலின் தந்திகள் பாடல் முழுக்க துணை வர , பாலு, வாணி :-)

https://youtu.be/PocJqvf0tiU

மௌலியுடன் 'நன்றி மீண்டும் வருக' படத்திற்காக 

பாலு ஜானகி குரல்களில் 

https://youtu.be/AwTkIki4xQo

Ihttps://youtu.be/leOSdaa3WpI

ஷ்யாமின் வயலின் காதல்கள்..அந்தி மயக்கம் படத்தில் இருந்து இப்பாடல் 

https://youtu.be/uVw0onqtBoE

மௌலியுடன் 'ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது'

வானொலி மற்றும் தூர்தர்ஷன் காலங்கள் 

https://youtu.be/RfYDosv6Gh8

'ஜாதி பூக்கள்' இன்னொரு அருமையான பாடல்கள் 

பூமாலைகள் இரு தோள்  சேருமே - அந்த வீணை தந்திகள் மற்றும் ஜெயச்சந்திரன் 

https://youtu.be/KfVxsXOtZwU

https://youtu.be/fupHcb_If_I

எத்தனை  அருமையான பாடல்கள்.என்னவொரு  அற்புதமான  இசை அமைப்பாளர்.  வானொலி மற்றும் அக்கால தூர்தர்ஷன் ஒளியும் ஒளியும், இலங்கை வானொலிக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும்.

தமிழ் திரைப்பட பாடல்கள் 70களிலும் ஆரோக்கியமாகவே இருந்தது என்பதற்கு இன்னொரு சாட்சி. 

இது ஷியாம் அவர்களின் தமிழ் இசை மட்டும் தான். அவரின் மலையாள இசையை இன்னும் கொண்டாட வேண்டும்.


Friday, March 5, 2021

A myth about early 70s Tamil Film Music - VII (Year 1973) - Part II

 இந்த ஆண்டு மெல்லிசை மன்னருக்கு இன்னொரு சிறப்பான ஆண்டாக அமைந்தது. 


எம்ஜியார் அவர்களுக்கு ஒரே ஒரு படத்திற்கு இசை அமைத்தாலும், அது மறக்க முடியாத ஒன்றாக அமைந்து விட்டது. அந்த படத்திற்கு அவர் முதலில் இசை அமைக்க ஒப்பந்தம் செய்யப்படவில்லை. பின்னர் அதையொட்டி நடந்த சில பிரச்னைகள், மனத்தாங்கல்களையும் தாண்டி ஒரு கலைஞன் என்பவன் எப்படி பட்ட சூழ்நிலையிலும் தன்னுடைய அர்ப்பணிப்பை சிறிதும் குறை வைக்காமல் அளிக்கிறான் என்பதற்கு ஒரு அடையாளமாக அமைந்து விட்டது அந்த பட பாடல்கள்.

கண்டு பிடித்து விட்டீர்களா ? 'உலகம் சுற்றும் வாலிபன்'

ஆஹா என்ன ஒரு அபாரமான இசை தொகுப்பு. எந்த பாடலை சொல்வது எதை விடுவது.

https://youtu.be/qcTOx-KkiIY

இப்பட பாடல்களை அனுபவித்து ஒரு தனி பதிவே எழுதலாம். அருமையான இசை கோர்வைகள், வாத்தியங்களை கையாளும் விதம், bansaayee பாடலை ஈஸ்வரி பாடும் விதம், மற்றும் விசில் , இளம் பாலுவின் நவரச நாடகம், தாசேடனின் 'தங்க தோணியிலே' கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் அவர்களின் பாடல் வரிகள்....இன்னும் காதில் ஒலித்து கொண்டிருக்கிறது.

இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் வந்த 'அலைகள்' மற்றும் இயக்குநர் ஏ ஜெகநாதன் அவர்களின் முதல் இயக்கமான 'மணிப்பயல்' இரண்டிலும் அருமையான பாடல்களை தந்தார் மன்னர்.

இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை பாடகர் பி ஜெயச்சந்திரன் 'மணிப்பயல்' படம் மூலம் தமிழுக்கு வந்தார். 

https://youtu.be/8vUPcY4uqbk

அலைகள் படத்தில் அவரின் இனிமையான பாடல் இங்கே.

https://youtu.be/lEAdIPWUHDY

மணிப்பயல் படத்தில் வந்த இன்னொரு பிரபலமான (அரசியல் இயக்கத்துக்கும்) பாடல் புலமைப்பித்தன் அவர்கள் எழுதி சீர்காழி மற்றும் ஈஸ்வரி அவர்களின் குரலில் ஓங்கி ஒலித்த. 

'காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்'

அரங்கேற்றம் திரைப்படத்திற்கு பிறகு அந்த வருடம் கே பாலசந்தர் இயக்கிய இன்னொரு முக்கியமான திரைப்படம் ' சொல்லத்தான் நினைக்கிறேன்' படத்தில் அமைந்த அத்தனை  பாடல்களும் சிறப்பு

பாலு ஈஸ்வரி ஜோடியில் ' கல்யாணம் கச்சேரி' மன்னரே பாடி ஹிட் அடித்த 'சொல்லத்தான் நினைக்கிறன்' 

ஜானகி சுசீலா இணையும் , வாலி வரிகளில் 'பல்லவி ஒன்று மன்னன் கேட்க பாடுவேனடி' வாணி குரலில் ' மலர் போல் சிரிப்பது' 

https://youtu.be/uTFsasGE8XA

அருமையான துள்ளிசை இந்த பாடல் ஈஸ்வரி அம்மாவின் குரலில் 'வாயாடி' படத்திற்காக.

https://youtu.be/xkrGHdaJ3gY

ஜெய் லட்சுமி ஜோடியில் நிறைய ஹிட் பாடல்கள் வந்துள்ளன. அந்த வகையில் இவ்வருடம் வந்த இந்த  மெலடி, பாலு சுசீலா அம்மா குரலில், திரைப்படம் 'தலை பிரசவம்'

https://youtu.be/wMcWSMT6DNo

மு க முத்து 'பிள்ளையோ பிள்ளை' படத்திற்கு பிறகு நடித்த படம் 'பூக்காரி'. மூன்றே மூன்று பாடல்கள். முத்துக்கள் மூன்று !

ஈஸ்வரி அவர்களின் குரலில் 'முப்பது பைசா மூணு முழம் முல்லை மல்லிகை கனகாம்பரம்' துள்ளிசையாக தவில் துணையுடன் வரும் ' முத்துப்பல் சிரிப்பென்னவோ' மகுடம் இட்டார் போல், அன்றும் இன்றும் என்றும் எல்லோரையும் மயங்க வைக்கும் ' காதலின் பொன் வீதியில்'. இப்பாடலை பற்றி என்ன சொல்வது. மன்னர் உச்ச நடிகர்கள், பெரிய தயாரிப்பாளர்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் எல்லோருக்கும் அள்ளி வழங்கியுள்ளார்

Ehttps://youtu.be/Evy7W7yXw6E

ஆரம்பத்தில் ஜானகியின் ஹம்மிங், டி எம் எஸ் அவரை பின்தொடர, பாடல் முழுக்க தாளக்கட்டில்  வரும் அந்த மோர்சிங், இசை கோர்வைகள் ,  its an ecstasy !

இரவு நேரத்தில் இப்பாடலை கேட்டு பாருங்கள், அந்த உணர்வை விவரிக்க இயலாது 

https://youtu.be/epnn7YFOBhE

https://youtu.be/TzjDAVLCLZo

சிவாஜி மன்னர் கூட்டணி இவ்வருடமும் களை காட்டியது. கெளரவம், பாரத விலாஸ்,பொன்னூஞ்சல், ராஜபார்ட் ரங்கதுரை என்று ஹிட் மேல் ஹிட் கொடுத்தனர்.

'மதன மாளிகை'க்கு இன்னும் கட்டுண்டவர் நாமெல்லாம் அல்லவா. தொடக்கத்தில் டி எம் எஸ் அவர்களின் பல்லவியை தொடர்ந்து சுசீலா 'அன்பே அன்பே அன்பே' என்று தொடர அதை தொடரும் அந்த இசை கோர்வை..ஆஹா 

https://youtu.be/kzNpKiXhM9A

கண்ணதாசன் படம் முழுக்க வியாபித்து இருப்பர் தன வரிகள் மூலம்.

https://youtu.be/4sRGMF-upO8

'பொன்னூஞ்சலில்' வரும் இப்பாடலின் முகப்பு இசைக்கு மயங்காதவர்கள் உண்டோ ? அருமையான மத்யமாவதி 

https://youtu.be/6g6SV9gPLXQ

'நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்' தாலாட்டு போல் அமைந்த மெட்டு, மெல்லிய சோகம் இழைந்தோடும் கூர்ந்து கவனித்தால்.சுசீலா அவர்கள்அசத்தி  இருப்பார், 'முத்து பிள்ளைகளே முத்து  பிள்ளைகளே' என்று அனுபல்லவியில் பாடும் இடத்தில.

https://youtu.be/sFoopk-FEeM

'கெளரவம்'

கண்ணதாசன் தன் பாடல் வரிகள் மூலமாகவே கதையை சொல்லும் ' கண்ணா நீயும் நானுமா' 'பாலூட்டி வளர்த்த கிளி' குழலுடன் இணையும் பாலு சுசீலா அம்மா அவர்களின் ' யமுனா நதி இங்கே' பியானோ உருகும் 'மெழுகுவர்த்தி எரிகின்றது' ஈஸ்வரி 'அதிசய உலகம்' என்று துள்ளிசைக்க.. எதை விடுவது. அற்புதமான இசை தொகுப்பு இத்திரைப்பட பாடல்கள்.

https://youtu.be/Vb85AOWRpFc

https://youtu.be/ZRClvBqmPH4

https://youtu.be/7gBgmFfEYRE

https://youtu.be/k53UNmN9B94

முக்தா இயக்கத்தில் வந்த 'சூரியகாந்தி'. ஜெ மற்றும் முத்துராமன் நடிப்பில் வெற்றி பெற்றது.

ஜெவின் மறுபக்கம் ஒரு திறமையான பின்னணி பாடகி. அவர் பாடிய பாடல்கள் சொற்பமே ஆனாலும் அத்தனையும் சிறப்பானவை. இப்படத்தில் அவர் இரு பாடல்களும் மிக சிறப்பு வாய்ந்தவை.

பாலுவுடன் சேர்ந்து 'நான் என்றால் அது நானும் அவளும்' டி எம் எஸ் அவர்களுடன் பாடும் 'ஓ மேரி தில்ருபா ' அருமையாக பாடி இருப்பர். மன்னரின் மெட்டுக்கும் இசை கோர்வைகளுக்கும் கேட்கவா வேண்டும்.

மனோரமா எனும் இன்னொரு அற்புத பின்னணி பாடகி, ஆமாம் ஆச்சி அவர்கள் தான். 'தெரியாதோ நோக்கு தெரியாதோ' என்று கலக்கி இருப்பார்.

படத்தில் முத்தாய்ப்பாக வரும் 'பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது' கண்ணதாசன் திரையில் தோன்றி பாடிய இப்பாடல் இன்றளவும் மிக பிரபலம்.

https://youtu.be/CUarA-ienGk

https://youtu.be/DXgU-VUHNLg

https://youtu.be/QSjm8gOGIJE

https://youtu.be/5NGa9yJdTtM


பி ஆர் பந்துலு இயக்கத்தில் வந்த 'கங்கை கௌரி' திரைப்படத்தில் வந்த அருமையான பாடல்கள்.

பாகேஸ்ரீ ராகத்தில் அமைந்த 'அந்தரங்கம் நானறிவேன்'

https://youtu.be/hJ9hPhdB8V8

ஜானகியின் அம்ருதவர்ஷினி 

https://youtu.be/OsvmKweamtA

டி எம் எஸ் குரலில் 'பிச்சாண்டி தன்னை கண்டு பிச்சை இடுங்கள்'

https://youtu.be/Z6pESDQrT0U

இவ்வாண்டிலும்   அருமையான பாடல்கள் வந்த தமிழ் திரை உலகில்.

வரும் பதிவுகளில் இன்னும் நிறைய பார்ப்போம். அது வரை குறிப்பிட்ட பாடல்களை கேட்டு மகிழுங்கள்.