நேற்று, மார்ச் 19 , இசை அமைப்பாளர் சாமுவேல் ஜோசப் என்கிற ஷியாம் அவர்களின் 84வது பிறந்த நாள்.
கடந்த பத்து நாட்களாக மனம் ஒரு நிலையில்லை. குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு மரணம் அதையொட்டிய மனதளர்வுகளுடன் சில உடல் தளர்வுகளும் நிரம்ப உளைச்சலை கொடுத்தன. இன்னும் அந்த மன இறுக்கத்திலிருந்து மீளவில்லை என்றாலும் 'இதுவும் கடந்து போகும்' எனும் சொல்லுக்கு ஏற்ப இசை மட்டுமே இந்த இறுக்கத்திலிருந்து விடுபட வல்லமை பெற்றது.
நேற்று இரவு பாடகர் கிருஷ்ண சந்திரன் அவர்கள் தன் முகநூலில் ஒரு பாடலை பதிவிட்டு இருந்தார்.
https://m.facebook.com/story.php?story_fbid=10216271268133337&id=1802328314
இரவின் மடியில் ஷியாம் தந்த சில அருமையான பாடல்களை கேட்டு உறங்க சென்றேன். அவற்றில் சிலவற்றை இங்கே உங்களுக்காக பகிர விரும்புகிறேன். 70 இறுதியிலும் 80களின் ஆரம்பத்தில் அவர் தமிழில், ஒரு 10 அல்லது 12 படங்களே செய்து இருந்தாலும், அவர் கொடுத்த பாடல்கள் தனித்து நின்றன.
இயக்குநர் மௌலி அவர்களுடன் கைகோர்த்து ஒரு 4 அல்லது 5 படங்களுக்கு இசை அமைத்தார்.
'பூந்த மல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே' என்று கருந்தேள் கண்ணாயிரம் மூலம் தமிழுக்கு அறிமுகம், அந்த படத்தில் அவர் கொடுத்த மெலடி பாலு சுசீலாவுடன் சேர்ந்து
1978 தீபாவளி திரைப்பட வெளியீட்டுக்களை பொறுத்தவரை ஒரு அட்டகாச தீபாவளி. 12 படங்கள் வெளி வந்தன. கமல் நான்கு படங்கள் 'சிகப்பு ரோஜாக்கள்' 'தப்பு தாளங்கள்,அவள் அப்படிதான்' 'மனிதரில் இத்தனை நிறங்களா ' ரஜினி ' தாய் மீது சத்தியம்' 'அவள் அப்படிதான்' தப்பு தாளங்கள்' சிவாஜி 'பைலட் ப்ரேமத்' சிவகுமார் 'கண்ணாமூச்சி' ஜெய்ஷ்ங்கர் 'வண்டிக்காரன் மகன்'. இன்றைய கால கட்டங்களில் இதை எல்லாம் நினைத்து கூட பார்க்க முடியாது.
'மழை தருமோ என் மேகம்' என்று இன்று உருக வைக்கும் மெலடி 'மனிதரில் இத்தனை நிறங்களா ' படத்தில் ஷியாம் அவர்கள் இசையில். சைலஜா அவர்களின் ஹம்மிங் வேறு உலகத்துக்கு இட்டு செல்லும் இந்த பாடலில். பாலுவின் ஆரம்ப ஹம்மிங் மற்றும் அந்த மணிஓசையுடன் முகப்பு இசை :-)
ஜானகி மற்றும் வாணி ஜெயராம் அவர்கள் குரலில் இன்னொரு அருமையான பாடல் இப்படத்தில் 'பொன்னே பூமியடி "
ஜெய்கணேஷ் நடிப்பில் வெளிவந்த இந்த பாடல் 'தேவதை' படத்திற்காக.. வானொலி காலங்களில் மிக பிரபலம்.
இந்த படம் அக்காலத்தில் எங்கள் குழுவில் மிகவும் பிரபலம் :-). கழுதைக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் இப்படத்தில்
இப்படத்திலும் அருமையான பாடல்களை கொடுத்தார் ஷியாம் அவர்கள்.
மௌலியுடன் இணைந்த முதல் படம் 'மற்றவை நேரில்'.
ஜானகி அவர்களின் தேன் குரலில் ஒலிக்கும்
'கள் வடியும் பூக்கள்' வந்த இந்த இரண்டு அருமையான பாடல்கள். இன்னொரு வானொலி தந்த வரங்கள் அக்காலத்தில்.
கான காந்தர்வன் குரலில்
பாலுவின் மெலடி 'வானம் பன்னீரை தூவும்'
'வா இந்த பக்கம்' தீபன் அவர்களில் சிறப்பான பாடல் என்னை பொறுத்தவரை.
ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் அவர்கள் முதல் படம் என்றும் நினைக்கிறேன்
அந்த அமர்க்களமான முகப்பு இசை மணி ஓசையுடன்...ஆஹா இதல்லவா சொர்க்கம்
வளைக்கரம் வளைக்கையில்
நாணம் போகுதே
அந்த ஆரம்ப வயலின் தந்திகள் பாடல் முழுக்க துணை வர , பாலு, வாணி :-)
மௌலியுடன் 'நன்றி மீண்டும் வருக' படத்திற்காக
பாலு ஜானகி குரல்களில்
ஷ்யாமின் வயலின் காதல்கள்..அந்தி மயக்கம் படத்தில் இருந்து இப்பாடல்
மௌலியுடன் 'ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது'
வானொலி மற்றும் தூர்தர்ஷன் காலங்கள்
'ஜாதி பூக்கள்' இன்னொரு அருமையான பாடல்கள்
பூமாலைகள் இரு தோள் சேருமே - அந்த வீணை தந்திகள் மற்றும் ஜெயச்சந்திரன்
எத்தனை அருமையான பாடல்கள்.என்னவொரு அற்புதமான இசை அமைப்பாளர். வானொலி மற்றும் அக்கால தூர்தர்ஷன் ஒளியும் ஒளியும், இலங்கை வானொலிக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும்.
தமிழ் திரைப்பட பாடல்கள் 70களிலும் ஆரோக்கியமாகவே இருந்தது என்பதற்கு இன்னொரு சாட்சி.
இது ஷியாம் அவர்களின் தமிழ் இசை மட்டும் தான். அவரின் மலையாள இசையை இன்னும் கொண்டாட வேண்டும்.
No comments:
Post a Comment