Thursday, March 30, 2023

மறுதொடக்கம்

 'மறுதொடக்கம்' - மீண்டுமொரு முறை  என்றே கூற வேண்டும். இதுவரை நிறைய 'மறுதொடக்கங்கள்' வாழ்க்கையில். முன்பெல்லாம் ஒரு பெரிய நம்பிக்கை இருந்தது. ஆனால் இம்முறை, அந்த நம்பிக்கை சுத்தமாக இல்லை. ஆனால் இம்முறை தொடங்கியே ஆக வேண்டும் எனவொரு கட்டாயம்.. இது எனக்கான மறுதொடக்கம் அல்ல. இன்னும் முக்கியமான கடமைகள் உள்ளன. அதை நிறைவேற்றினால் தான் என் வாழ்விற்கான ஒரு அர்த்தம். ஆனால் எங்கிருந்து தொடங்க போகிறேன் என்று இதுவரை தெரியவில்லை.மீள முடியும்  என்ற நம்பிக்கையும் இல்லை. 


இதற்கான வழி வகைகள் இன்று வரை எனக்கு புலப்படவில்லை. கடந்த 9 ஆண்டுகளாக ஒரு roller coaster போல் சென்று கொண்டு இருந்த போது, ஒரு பேரிடி  மட்டுமல்ல, இரண்டொரு வந்து புரட்டி போட்டது. இன்னும் மீளவில்லை. அதையும் தாண்டி, இனி ஒன்றும் செய்ய முடியாது என்று கடந்து செல்ல முற்பட்ட போது, பணி  இடத்தில ஏற்பட்டது பேரிடிக்கும் மேலானது. என்னுடைய 3 தசாப்தங்களுக்கு மேலான பணியில் இந்த மாதிரியான ஒரு சிக்கலை சந்தித்ததில்லை. P Sankar அண்ணா குறிப்பிட்டது போல், கடுமையான நெறிமுறைகளை கடை  பிடிப்பவன் பணியிடத்தில். எதையும் ஒரு ஒழுங்கு முறையுடன் செய்ய வேண்டும், பணியிடம் என்பது அலுவலக பணி அதை சார்ந்த அலுவலுக்கு மட்டுமே என்ற மன நிலை கொண்டவன்.My success till date is known for my work and professional ethics. இதற்கே ஒரு பங்கம் வந்தபோது, எல்லாம் முடிந்து விட்டது போல் இருந்தது. White collar corporate crimes are dangerous than actual crimes we see and read in news. ஒருவரை பணியிடத்தில் திறமை மூலம் எதிர்கொள்ள முடியவில்லை என்றால், கார்பொரேட் உலகத்தில் உள்ள ஒரே ஆயுதம், hit him / her or below the belt.And if one carries high ethics and integrity at work, its more easy for the opponent to strike at right time.

ஒரு மூன்று மாதங்கள் என்னால் மனதளவில் வெளியே வர முடியவில்லை. ஒரு மாதம் என்னுடைய அறையை விட்டே வெளியில் வரவில்லை. இதனால் மனதளவில் நிறைய பாதிப்பு, மருத்துவ சிகிச்சைகளுக்கு தள்ளப்பட்டேன். 

சில மாதங்களுக்கு முன்பு ஒரு மருத்துவ இக்கட்டான நிலையை சமாளிக்க கூட்டுநிதி நல்கை என்ற ஒரு உதவியை என்னையறிந்த நண்பர்கள் செய்த போதும், சில நல்ல உள்ளங்கள் என்னுடைய குடும்பத்தின் மேல் கேள்வி எழுப்பின. இவையெல்லாம் என்னை எந்த அளவுக்கு மோசமான மன நிலைக்கு தள்ளியது என்பது இரண்டொரு நண்பர்களுக்கு தெரியும். பணம் ஈட்டுவதற்கோ, பொருள்  ஈட்டுவதற்கோ நான் சமூக வலைத்தளங்களுக்கு  வரவில்லை. இதுவரை எந்த ஒரு அலுவலக பணியையும், அவர்கள் கொடுக்கும் சம்பளத்தை முன்னிட்டே தெரிவு செய்ததில்லை. எதை செய்தாலும் அதில் ஒரு வேட்கை. அது அலுவலகமாக இருக்கட்டும், இசை பற்றிய பதிவுகளாக இருக்கட்டும், வீட்டில் சமையலறை வேலைகளாகட்டும். அதில் ஒரு பிடிப்பு, ஒரு செயலொழுங்கு.


எதற்கு இத்தனை  பெரிய பீடிகை? இது என்னை பற்றி  பிறர் பச்சாதாப படுவதற்கோ அல்ல சுய கழிவிரக்க பதிவோ இல்லை. இதனால் ஏதாவது எதிர்பார்க்கிறேனோ என்ற ஒரு கோரிக்கையும் இல்லை. 


சமூக வலைத்தளங்களின் ஆரம்ப காலங்களில், ஒரு narrative, agenda இல்லாமல்  லகுவாக  உலவிய போது கிடைத்த அனுபவங்கள், நட்புகள், நிகழ்வுகள் தற்போது இல்லை. சங்கர் அண்ணா ஒரு முறை சொன்னது போல், இயக்குனர் விக்ரமன் திரைப்படம் போல் இருந்த சமூக வலைத்தளம். இன்று விக்ரமன் அவர்களின் பிறந்த நாள் :-)


இன்று அங்கு முழுவதும் ஒரு மிக பெரிய இறுக்கம். எதையும் சுலபமாக சொல்ல முடியவில்லை. Personally I had made lot of friends, some are close like my family. நிறைய நல்ல நண்பர்களை சந்தித்து இருக்கிறேன். இன்றும் அவரில் சிலரை முடிந்த போது சந்திக்கிறேன், கைபேசியில் அல்லது குறுந்தகவல் மூலமாகவோ சுலபமாக பேச முடிகிறது.


But the flip side of it had hit me below the belt. I had experienced more back stabbing. Even when I was peak of my struggle, some good friend known well, questioned my actions. End of it I lost more than what I gained. Its not right of my part to bring out my personal loss here but I have to be honest to myself and people whom I have to take care in my life. My openness, easy going, not being judgmental about people, has given room for few to take all and leave me high and dry.

சில நண்பர்களுக்கு தெரியும் நான் எத்தனை பணத்தை இங்கு இழந்து இருக்கிறேன் என்று. தான் கஷ்டப்பட்டாலும் பிறருக்குஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்று வளர்ந்த விதம். அதுவே எனக்கு வினையாக முடிந்தது. கொடுத்திற்கெல்லாம் கணக்கு வைத்து கொள்ளாமல், திரும்ப கேட்காமல் இருந்தது தவறு என புரிய வைத்தனர். ஆனால் இன்று அவர்கள் வந்தாலும் நான் கேட்க மாட்டேன். மாறாக என்னை பற்றி புறம் பேசியது தான் என்னை மிகவும் காயப்படுத்தியது.


எத்தனை கலகலப்பான உரையாடல்கள், கோவில், இசை, சினிமா, விளையாட்டு, கோவிலை சொல்லி விட்டு, பிரசாதத்தை சொல்லாமல் விட முடியுமா :-). இன்று எதை பற்றியும் சொல்ல முடியவில்லை. நம்முடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் அனர்த்தம் கற்பிக்கப்படுகிறது. எனக்கு ஒரு அரசியல் நிலைப்பாடு இல்லை என்பது ஒரு பெரிய குறையா காணப்பட்டது. என்னை பொறுத்தவரை, பொது வெளியில் எதை சொல்ல வேண்டும் எதை சொல்லக்கூடாது என்ற வரையறையில் வாழ்கிறவன். முடிந்த வரை மற்றவர்களை காயப்படுத்தியதில்லை. என்னுடைய அரசியல் நிலைப்பாடு, என்னுடைய மதம் சார்ந்த நிலைப்பாடு என்பதெல்லாம் என்னுடைய உள்ளத்திற்கு தெரிந்தால் போதும் என வாழ்கிறவன். 


இனிமேல் என்ன :


தொடங்க வேண்டும் கண்டிப்பாக. கடமையை முடிக்காமல் செல்லக்கூடாது. அதுவரை பொருளீட்ட வேண்டும், எனக்காக அல்ல. லௌகீக விஷயங்களில் இருந்து மெதுவாக விலக வேண்டும். மேற்சொன்ன கடுமையான காலங்களை, மேற்படிப்பில் கவனம் செலுத்தினேன்.இன்னும்  இரண்டொரு மாதங்களில் இரு  முதுநிலை படிப்புகளை  முடிக்க வேண்டும்.இன்னும் நிறைய படிக்க வேண்டும். 

வரும் கல்வியாண்டிலாவது, தமிழ் இளங்கலை பயில ஆரம்பிக்க வேண்டும்.கடந்த வருடமே சேர விரும்பி, தவற விட்டு விட்டேன். 

இன்னும் நிறைய இசையை கேட்க வேண்டும், கேட்டதை பகிர வேண்டும். மனதின்  அருகில் இருக்கும் நண்பர்களிடம் தொடர்ந்து பேச வேண்டும்.

இதற்கெல்லாம் சமூக வலைத்தளம் ஒரு மிகப்பெரிய தடைக்கல்லாக இருக்கிறது. சமூகவலைத்தளத்தில் என்னுடைய மன இறுக்கத்தை வெளிப்படுத்தி, எதையும் சாதிக்க விரும்பவில்லை. 

இந்தவொரு காரணத்திற்காக தான் திரும்பி வந்த சமூக வலைதள அடையாளத்திலிருந்தும் சமீபத்தில் வெளியேறினேன்.

இங்கு தொடர்ந்து இசையை பற்றி மற்றும் மனத்திற்கு பிடித்ததை பேசுவோம், பகிர்வோம். 


மீளுவதற்கு இப்போதைக்கு, படிப்பு, படிப்பு மற்றும் இசையை ரசித்து மகிழ்வது ஒன்றே வழி என தோன்றுகிறது. 

எல்லோரும் வளமுடன் இருக்க வாழ்த்துக்கள்.

நேரம் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டும் என நினைத்தால், பின்னூட்டம் இடவும்.