Thursday, March 28, 2013

கல்யாணி பாடாத கச்சேரி களை கட்டாது



கல்யாணி ராகம் எனக்கு மிகவும் பிடிக்கும். கல்யாணி ராகம் பாடாத கச்சேரி களை கட்டாது என்பது கர்நாடக சங்கீதம் மிகவும் தெரிந்தது போல் சொல்லி கொள்வேன்.நமக்கு எல்லாமே அரை குறை தான். சரி விஷயத்துக்கு வருவோம்.
இரண்டு நாட்களுக்கு முன்பு ட்விட்டெர்ல ஒருத்தர் இந்த பாட்டை பத்தி ரொம்ப ஸ்லாகித்து இருந்தார்.சரி என்று கொஞ்சம் நினைவலைகளை அசை போட்ட போது கிடைத்த பொக்கிஷம்.என் ராஜாவுக்கும் கல்யாணி ரொம்ப பிடிக்கும் போல் இருக்கிறது. அவர் கல்யாணியில் கொடுத்த பாடல்கள் எல்லாம் சொக்க தங்கம்.கண்ணாலே  காதல் கவிதை சொன்னாலே உனக்காக (ஆத்மா), வைதேஹி ராமன் கை சேரும் காலம் (பகல் நிலவு),மஞ்சள் வெயில் (நண்டு),ஜனனி ஜனனி (தாய் மூகாம்பிகை), நதியில் ஆடும் பூவனம் (காதல் ஓவியம்),கீதம் சங்கீதம் (கொக்கரக்கோ),வெள்ளை புறா ஒன்று (புது கவிதை),சுந்தரி கன்னல் ஒரு சேதி (தளபதி).....நெறைய நெறைய. இந்த பதிவிற்கான பாடல், வந்தாள் மகாலக்ஷ்மியே (உயர்ந்த உள்ளம்),அக்மார்க் கல்யாணி. பாடலுக்கான களம் மிக அருமையா அமைக்கப்பட்டு இருக்கும். இந்த படம், பப்படம் தான் என்றாலும் ராஜாவால் கொஞ்சம் காப்பற்றப்பட்டது இந்த மாதிரி  பாடல்களால் தான். நாயகன் ஒரு பணக்கார குடிமகன்,தனது வாழ்க்கையில் வந்த ஒரு பெண்ணை மகாலக்ஷ்மியே வந்தது போல் போற்றி பாடுவதாக அமைந்துள்ளது. வாலிப கவிஞர் எழுதிய பாடலா என்று தெரியவில்லை. நாயகன் தன் குடியையும் , தான் குடித்தனம் வினையும் உள்ள கிடைக்கையும் இந்த வரிகளில், "அடியேனின் குடி வாழ, தனம் வாழ" என்று கிண்டலாக பாடலாசிரியர் எழுதி இருப்பார். பாலுவிற்கு இந்த மாதிரி பாடல்கள் எல்லாம் அல்வா. அவரின் சில சங்கதிகள் இந்த பாடலில் அற்புதம். ராஜா, பாலு மற்றும் கமல், யார் யாரை விஞ்சுவார்கள் என்று எதிர்பார்க்க வைக்கும் பாடல்.. இதோ இங்கே உங்கள் பார்வைக்கு.
http://youtu.be/L5O3Tjshx9Y