Wednesday, July 24, 2013

அழகிய தமிழ் மகள் : மஞ்சுளா



திங்கட்கிழமை இரவு நண்பர் பாஸ்கரன் சிவராமன் கை பேசியில் அழைத்து இருந்தார். அண்ணா சௌக்கியமா என்றேன். அவர், என்னய்யா நேற்று 21st ஜூலை சிவாஜி பத்தி எதுவும் பதிவே போடலை என்றார். நான், எழுதி வைத்து இருந்தேன், கொஞ்சம் நேரம் கிடைக்கவில்லை மற்றும் நான் இன்னும் வாலி அவர்களின் hangover லேயே இருந்து விட்டேன் என்றேன்.  நேற்று, செவ்வாய் காலை எழுந்தவுடன் தின தந்தியில் மஞ்சுளா அவர்கள் கட்டிலில் இருந்து விழுந்து அடி பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற செய்தி படித்தேன். அந்த செய்தியில் அவர் நிலைமை கவலைக்கிடம் பற்றி எந்த விவரமும் இல்லை. அவர் விரைவில் குணமாகட்டும் என்று என்னுடைய காலை பூஜையில் வேண்டிகொண்டு அலுவலகம் சென்றேன். காலை ஒரு meeting ,முடித்து விட்டு வேலை செய்து கொண்டு இருந்தபோது நடிகை குஷ்பு ட்விட்டெரில் மஞ்சுளா அவர்கள் இருந்த போன செய்தியை பதிவிட்டு இருந்தார். திக்கேன்றது. உடனே வலையில் தினகரன் தினமலர் போன்ற தளங்களில் தேடினால் ஒரு விவரமும் இல்லை. குழப்பம். சில வினாடிகளில் அந்த செய்தி உண்மை என்று தகவல் தொடர்பாளர் நிகில் முருகனும் த்விட்டேரில் உறுதி செய்தார். மனம் பின்நோக்கி பறந்தது. இந்த அழகிய தமிழ் மகளை பற்றி.
இறைவன் ஒரு நாள் உலகை காண என்று பாடி திரிந்து திரை உலகில் அறிமுகமான இவரை, பொன் மன செம்மல், ரிக்க்ஷாக்காரன் படத்தில் அழகிய தமிழ் மகள் ஆக்கினார். அதன் பிறகு இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் ஏறு  முகம் தான். ராஜகுமாரி, பத்மினி, வைஜயந்திமாலா,  காஞ்சனா, பிறகு இவர் இன்னொரு கனவு கன்னி. 70 களில்,எங்கள்  உயர்நிலை பள்ளி நண்பர்களிடையே வெகு பிரசித்தம் இவர். ஷர்மிளா டாகூர் கொண்டை தலை ஸ்டைல் இவரின் style quotient. இவருக்கு அமைந்தன அருமையான பாடல்கள். அழகிய தமிழ் மகள், நிலவு ஒரு பெண்ணாகி ,ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து, பொன்னந்தி மாலை பொழுது,மலரே குறிஞ்சி மலரே, மல்லிகை முல்லை பூப்பந்தல்,நாளை நாளை என்றிருந்தேன், மாலையிட்டான் ஒரு மன்னன், அம்மானை அழகு மிகு கண் மானை, அங்கே வருவது யாரோ, போன்ற பாடல்கள் இன்றும் என்றும் இவரை நினைவுபடுத்துகின்றன.
ரசிகர்கள் மயங்கினர் இவரிடம், ஆனால் இவரோ உன்னிடம் மயங்குகிறேன் என்று விஜயகுமாரிடம் மயங்கி திருமணம் செய்து கொண்டார்.

இவர் மறைவு தமிழ் திரை உலகத்திற்கு இன்னொரு இழப்பு. இவரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு இக்குழு தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது


 

Friday, July 19, 2013

மாசறு பொன்னே : வாலி

மூன்று எழுத்தில் என் மூச்சிருக்கும் என்று எழுதியவரின் மூச்சு நின்று விட்டது. இன்னொரு இழப்பு ஸ்ரீ ரங்கத்துக்கு :-( ஊர் பாசம் அதிகம் மனது வலிக்கிறது. ஸ்ரீ ரங்கத்தில் இன்னொரு ரங்கராஜனோடு (எழுத்தாளர் சுஜாதா) சேர்ந்து இந்த ரங்கராஜன் கையெழுத்து பத்திரிக்கையில் கதை,கட்டுரைகள் எழுதி உள்ளார் .
TMS மூலம் திரை உலகிற்கு அறிமுகமாகி முதலில் எழுதியது "சிரிகின்றான் இவன் சிரிகின்றான்". இன்று அழத்தான் முடிகிறது.
இவரின் அம்மா பாசம் அளவிடமுடியாதது. அம்மா என்றால் அன்பு, அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே, நானாக நானில்லை தாயே வரை நீண்டது.

இராமாயணத்தில் வாலி மற்றும் ராமசந்திரன் இடையே எத்தகைய உறவு இருந்தது என்பதை நாம் கண் கூடாக கண்டதில்லை. ஆனால் இந்த வாலிக்கும் (MG ) ராமசந்திரன் இடையே இருந்த நட்பு...... நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் தொடங்கி,இவர்கள் இருவரும் தொட்டால் பூ மலர்ந்தது (தொட்டால் பூ மலரும்), கண் போன போக்கிலே கால் போனது (பணம் படைத்தவன்).

கணேசனையும் விட்டு வைக்கவில்லை இவர். இதோ எந்தன் தெய்வம் முன்னாலே என்று நம் முன் நிறுத்தி இருவரும் நம் கண்களை குளமாக்குகிரார்கள்.

காலத்தை கடந்து நிகழ்காலத்திற்கும் தன்னை அடையாளபடுத்தி கொண்டார். உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் (கமல்), பழமுதிர் சோலை (கார்த்திக்), கொஞ்ச நாள் பொறு தலைவா (அஜித் ) போன்று காலத்துடன் கை கோர்த்தார்.

கோல முகமும் குறு நகையும் குளிர் நிலவென நீல விழியும் பிறைநுதலும் விளங்கேடுமெனில் நீலியென சூலியென தமிழ் மறை தொழும் , எங்கள் மாசறு பொன்னே .....
அற்புதமான பாடல் தேவர் மகனுக்காக.

பக்தியில் சற்றும் சளைத்தவர் இல்லை. இராமயணத்தை இரத்தின சுருக்கமாக, பல்லவி,அனு பல்லவி மற்றும் முதல் சரணங்களில் அமைத்த, ஸ்ரீ ராம நாம ஒரு வேதமே (ஸ்ரீ இராகவேந்திரர் ) ஒன்றே சாட்சி.

ராப் மற்றும் டிஸ்கோ நடனங்கள் பிரபலம் ஆகிய கால கட்டங்களில் கூட தனி கோடியை உயர பறக்க வைத்தார். சிக்கு சிக்கு புக்கு ரயிலே, முக்கால முக்காபுலா, சின்ன ராசாவே சிதேறேம்பு என்னை கடிக்குது போன்ற பாடல்களில் மூலம் அந்த அந்த கால கட்டத்தில் வாழ்ந்தார்.

ரஜினியின் சிவாஜி படத்தில் ஒரு பாடல், தீ தீ தீ ஜெக ஜோதி ஜோதி... தளபதி வெடி ஜாதி ஜாதி என்று எழுதி விட்டு நிமிர்தவர் அடுத்து என்ன எழுதுவார் என்றே எல்லோரும் அவர் முகத்தையே பார்க்க வந்து விழுந்தன
வரிகள் , பில்லா ரங்கா பாஷா தான் என் பிஸ்டல் பேசும் பேஷா தான்....அறையில் அப்ளாஸ் அடங்க நேரமாயிற்று .

எல்லா காலங்களிலும் relevant ஆகா இருந்தவர்.

தாயாலே வந்தது தீயாலே வெந்தது என்று தனக்கே இரங்கற்பா எழுதி உள்ளார்.

அந்த மாசறு பொன் இன்று மறைந்து விட்டார். வானுலகம் அவர் புகழ் பாட அவரை அழைத்து கொண்டதோ என்னவோ . என்னை பொறுத்தவரை இனிமேல் தான் அவர் வாழ போகிறார் இப்பூவுலகில்.
 http://youtu.be/XTJpbcFyN_I