தமிழ் திரை இசையை பொறுத்தவரை இந்த ஆண்டும் ஒரு இனிமையான ஆண்டாக அமைந்தது தமிழ் திரைப்பாடல்களை பொறுத்த வரையில். மன்னரின் ராஜ்யம் தொடர்ந்தாலும் பிற இசை அமைப்பாளர்களும் களம் கண்டு வெற்றிபெற்றனர். வி குமார் அவர்கள் 8 முதல் 10 படங்களுக்கு இசை அமைத்தார். விஜய பாஸ்கர் அவர்களும் இரண்டே படங்களுக்கு இசை அமைத்தாலும் அவை மூலம் தமிழ் இசை ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார். 'முருகா வடிவேலா உன்னை அறிவேன் தெய்வபாலா' 'ஏறுதம்மா ஏறுதம்மா இறக்கை கட்டி ஓடுதம்மா விலைகள் ' ஜி கே வெங்கடேஷ் இசை அமைத்த 'முருகன் காட்டிய வழி'. இசை இரட்டையர்கள் சங்கர் கணேஷ் 'வெள்ளிக்கிழமை விரதம்' படத்திற்காக கொடுத்த 'தீம் ம்யூசிக் ' பல தேவர் படங்களுக்கு முன்னோடியாக அமைந்தது. ஒரே ஒரு படம் இசை அமைத்தாலும் ''வைரமாக' மின்னிய 'இரு மாங்கனி போல் இதழோரம்' ஜெ அவர்களில் இனிய குரலில், டி ஆர் பாப்பா அவர்கள். இவர்களை தவிர வீணை கலைஞர் இசையில் மூதறிஞர் ராஜாஜி அவர்களின் 'திக்கற்ற பார்வதி' வாணி அவர்களின் குரலில் ' ஆகாயம் மழை பொழிந்தால்' . 'எழுதி எழுதி பழகி வந்தேன்' குன்னக்குடியார் இசையில் குமாஸ்தாவின் மகள் படத்திற்காக. கே வி மஹாதேவன் அவர்கள் இரண்டொரு படத்திற்கு மட்டும் இசை அமைத்தார். வாணி ராணி படத்தில் வரும் 'முல்லை பூ பல்லக்கு போவதெங்கே'. சூலமங்கலம் சஹோதரிகள் இசையில் வந்த 'டைகர் தாத்தாச்சாரியார்' படத்தில் 'ஏழுமலை வாசா வெங்கடேசா'.
குமாஸ்தாவின் மகள்
திக்கற்ற பார்வதி
வைரம்
முருகன் காட்டிய வழி
வெள்ளிக்கிழமை விரதம்
டைகர் தாத்தாச்சாரியார்
வாணி ராணி
அப்பா அம்மா - ஷியாம் அவர்கள் இசையில்
பின்னணி பாடகியரை பொறுத்த வரை இந்த ஆண்டு ஒரு இனிய திருப்பமாக இருந்தது. கலைவாணியின் அருள் பெற்ற திருமதி வாணி ஜெயராம் அவர்களின் 'மல்லிகை என் மன்னன் மயங்கும்' அவர் மன்னனை மட்டுமில்லாமல் அனைத்து இசை உள்ளங்களையும் கொள்ளை கொண்டது. அன்று தொடங்கிய அந்த மல்லிகையின் மணம் வெகு காலத்திற்கு தமிழ் திரை இசை உலகை ஆட்கொண்டது.
73ஆம் ஆண்டில் உலகம் சுற்றும் வாலிபன் எனும் ஒரே ஒரு பெரிய இசை வெற்றியை கொடுத்த எம்ஜீயார் அவர்கள் இந்த ஆண்டு 3 ஹிட் படங்களை கொடுத்தார். மூன்று படங்களின் பாடல்களும் பெரும் வெற்றியை ஈட்டின.
அடுத்த பகுதியில் வாணி, எம்ஜீயார், நடிகர் திலகம் ,வி குமார் மற்றும் மன்னர் கொடுத்த இசையை பற்றி காண்போம். அதுவரை மேலே குறிப்பிட்ட பாடல்களை கேட்டு ரசியுங்கள்.
No comments:
Post a Comment