Friday, November 18, 2011

முகநூல் இணைப்புகள்

முகநூல் ஒரு அருமையான இணைப்பு வட்டம் என்பதை மறுபடியும் நிருபித்தது. எத்தனை அருமையான அன்புமிக்க மனிதர்களுடன் என்னை இணைதிருக்கிறது என்பதற்கு சிறந்த அடையாளகம எழுத்தாளர் முருகானந்தம்,எழுத்தாளர் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் ஆகியோரை நேரில் சந்தித்து அளவளாவும் பாக்யம் கொடுத்து இருக்கிறது. எழுத்தாளர் முருகானந்தம் அவர்களின் அன்புக்கு நான் என்றும் கடமை பட்டு இருக்கிறேன். இந்த பட்டியலில் முக நூலில் என் அண்ணா திருவாளர் சேஷாத்ரி நாராயணன் அவர்களையும் சந்திக்க வைத்தது. நமக்கு பிடித்த சில விஷயங்களை நமக்கு பிடிதவர்குளுடன் சேர்ந்து செய்யும் பொழுது கிடைக்கும் ஆனந்தம் அளவில்லாதது. அவ்வாறே சேஷாத்ரி நாராயணன் அவர்களுடன் திருபதி
பயணம் இறைவன் தரிசனம் ஆனந்தம் ஆனந்தம். அண்ணா உங்கள் அன்புக்கு என்றும் அடிபணிய ஆசை. அடுத்து என் அன்பு பட்டியலில் இருக்கும் ஆன்றோர் சான்றோர்கள் திருவளர்கள் கிருஷ்ணமுர்த்தி கிருஷ்ணையர், ஓவிய மேதை ஜீவா நந்தன் மற்றும் சமய சஞ்சீவி எஸ் எச்செஸ் பீ. இவர்களை சந்திக்கும் தருணத்துக்காக காத்து இருக்கிறேன்.

எப்போ வருவரோ எந்தன் கலி தீர்க்க

1 comment:

kaanchan said...

முகம் தெரியாத முகங்களின் அறிமுகம் நமக்கு “முக நூல்களின்” மூலம் கிட்டியது எனபதனை மறுக்கமுடியாது.....

முகம் தெரிந்த பல முகங்கள் தங்கள் உண்மையான முகங்களை மறைக்க முற்படும்போது......

முற்றிலும் புதிதான முகங்களின் முகச்சுளிப்புக்களையும் பொருட்படுத்தாமல் முழு வேகமுடன் முகம் காட்ட விழைவது பெரிய ஆச்சரியமான விஷயம் தான்....

முகநூல் பல நல்ல உள்ளங்களை அடையாளம் காட்டும் ஒரு நல்ல வழிகாட்டி எனவும் கூறலாம்.....

முகநூல் வழிகாட்டிடினும் பயணம் நாம் தான் கொள்ளவேண்டும், அந்தப் பயணமும் பயனான, நம் வாழ்வின் முன்னேற்றத்திற்கும், நம்மைத் தொடர்ந்து வருவோருக்கும் நல்ல படிக்கல்லாக இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பம்....

தொடர்வோம் நம் இனிய, அரிய பயணத்தை நிறுத்திடாமல், வாழ்த்துக்கள்.....