இன்று காலை சமூக வலையில் தென்பட்ட சேதி, இன்றுடன் 39 ஆண்டுகளை நிறைவு செய்கிறது 'பயணங்கள் முடிவதில்லை' திரைப்படம் வெளியாகி என்பதாகும். அந்த சேதியை பார்த்ததிலிருந்து நினைவுகள் பின்னோக்கி பயணப்பட்டு அந்நாளைய இனிய நினைவுகள் தான் தற்போது இப்பதிவு எழுதும் வரை.
பள்ளி வாழ்க்கையின் இறுதி ஆண்டில் வெளியான திரைப்படம். இத்திரைப்படத்தை பார்த்ததும் பின்னர் அப்பாடல்களை பற்றி வெகு நாட்கள் நண்பர்களுடன் விவாதித்தும், சிறு செல்ல சண்டைகளுடன், ஒருவர் ஒருவராக அவருக்கு பிடித்த பாடலை சிலாகிக்கும் போது, நாம் ஏதோ சரியா பார்க்கவில்லையா என்று மறு முறை பார்க்க சென்றதும் மனதில் நிழலாடுகின்றன.
இரண்டு நிகழ்வுகளை குறிப்பிட்டாக வேண்டும் இங்கு.
1980இல் வெளி வந்த 'ஒரு தலை ராகம்' படத்தில், நாயகன் ஒரு பாடகன் ஆனால் அனைத்து பாடல்களையும் ஒரே பின்னணி பாடகர் பாடி இருக்க மாட்டார். ஆனால் 'பயணங்கள் முடிவதில்லை' படத்தில் நாயனுக்கு ஒரே பாடகர் தான் பின்னணி பாடி இருப்பார். நண்பர்கள் மத்தியில் இது ஒரு விவாத பொருளாயிற்று. எப்படி ஒரு பாடகர் என்பவர் வேறு வேறு குரல்களை கொண்டவராக இருக்கு முடியும் :-). ராஜா, இசை அமைப்பாளர் என்ற முறையில் மட்டுமில்லாமல், இது போன்ற ஒரு சின்ன சின்ன விஷயங்களையும் பார்த்து செய்துள்ளார் என்பதே வாதம்.
நமக்கு தான் எங்கே ஏதாவது சண்டை போட சிக்குமான்னு காத்துகிட்டு இருப்போமே :-)
இன்னொரு நிகழ்வு, பயணங்கள் முடிவதில்லை வரும் முன்பே ராஜா மிக பிரபலமாகி 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்து விட்டார். இன்னும் 'மூடு பனி ' பின்னணி இசை பற்றி வகுப்பு நண்பனிடம் மூன்று மணி நேரத்துக்கு மேல் சிலாகித்து வீட்டிற்கு தாமதமாக வந்து பாட்டு வாங்கியது :-) மறக்கவில்லை. ஆனால் பயணங்கள் முடிவதில்லை படம் ஒரு திருப்பு முனை. ஒரு படத்தில் எல்லா பாடல்களும் ஹிட் என்ற ஒரு டெம்ப்ளட் உருவானது இப்படத்தில் இருந்து தான். பாடல்களுக்காகவே ஒரு படம் வெற்றிகரமாக repeated audience திரை அரங்குக்கு வரவழைத்ததும். இப்படத்தையொட்டி பல படங்கள் பாடல்கள் அனைத்தும் ஹிட் என்ற நிலை உருவானது. பட கதை, நடிப்பு, பற்றி எல்லாம் விட்டு விட்டால், பாடல்களுக்காகவே ஒரு திரைப்படம் ஹிட் ஆனது என்பது ப.மு. பிறகு ஒரு ட்ரெண்ட் ஆகி போனது. நிறைய படங்கள் இவ்வகையில் அவர் கொடுத்து கொண்டே இருந்தார். நெறய சொல்லலாம்.
இப்பட முழு பாடல்களை கேட்க :
No comments:
Post a Comment