1973 ஆம் ஆண்டு வெளியான பாடல்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். இந்த ஆண்டு திரைப்படங்கள் வெளியீடு பொறுத்தவரை சற்று தேங்கியே இருந்தது என்று கூறலாம். எம் ஜீ ஆர் அவர்கள் இரண்டு படங்கள் மட்டுமே நடித்தார். 1972இல் தனி கட்சி தொடங்கியதால் இந்த ஆண்டு சற்று அரசியலில் தீவிர கவனம் செலுத்திய காரணமாகவும் இருக்கலாம்.
கடந்த சில ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் சிவாஜி பல படங்களில் நடித்தார். இசையை பொறுத்தவரை இதுவும் ஒரு மெல்லிசை மன்னர் ஆண்டாகவே அமைந்தது. சங்கர் கணேஷ் மற்றும் வி குமார் அவர்களும் அவர்களுக்கான இடத்தை தக்க வைத்து படங்களுக்கு இசை அமைத்தனர்.
டி ஆர் பாப்பா இசை அமைத்து வெளி வந்த 'மறு பிறவி' படத்தில் எம் ஆர் விஜயா அவர்கள் குரலில்
ஜி கே வெங்கடேஷ் அவர் இசையில் வெளிவந்த படம் ' பொண்ணுக்கு தங்க மனசு'
'தேன் சிந்துதே வானம்' தேனினும் இனிய பாலு மற்றும் ஜானகி குரல்களில் இன்றளவும் பிரபலம்.
எல் ஆர் ஈஸ்வரி அவர்கள் குரலில் வந்த இந்த இனிமையான பாடல்
கே வி மஹாதேவன் அவர்கள் 3 அல்லது 4 படத்திற்கு இசை அமைத்தார் இந்த வருடம்.
கண்டசாலா அவர்கள் குரலில் (சந்தோஷம் & சோகம்) 'முத்துக்கு முத்தாக' அன்பு சகோதரர்கள் படத்தில்
சிவாஜிக்கு இசை அமைத்த படம் 'எங்கள் தங்க ராஜா'
முதல் சரணத்தில் முதல் வரிக்கு பிறகு வரும் அந்த ஹம்மிங் சரணம் முடிவில் வரும் ஸ்வரங்கள்.சுசீலா எனும் ஒரு nightingale
அந்த முகப்பு இசை..ஆஹா
கவிஞர் இந்த மாதிரியான பாடல் சந்தர்ப்பங்களை விடுவாரா :-)
பாடல் tune தெலுங்கு மூலம் என்றாலும் தமிழிலும் மிக பிரபலம்
பாடலின் நடுவில் வரும் சிறிய ஹம்மிங் , 'காலை நேரத்தில் காயங்கள் பார்த்து' என்று கிறங்கி பாடும் சுசீலா
brilliant melody !
இதே வருடம் எம் ஜீ யாருக்காக 'பட்டிக்காட்டு பொன்னையா ' படத்திற்கு இசை அமைத்தார்.
குன்னக்குடிய வைத்தியநாதன் இசை அமைத்த இரண்டு படங்கள் இவ்வருடம்.
கே பி சுந்தராம்பாள் கணீர் குரலில் வரும் 'ஏழுமலை இருக்க எனக்கென்ன மனக்கவலை' அருமையான ஹம்சானந்தி ராகத்தில் அமைந்தது.
இன்னொரு பாடல் 'வரும் நாளெல்லாம் உந்தன் திருநாளே'
தமிழில் முதல் சினிமாஸ்கோப் படம் என்ற பெருமை பெற்ற 'ராஜா ராஜா சோழன்' படத்திற்கு இசை அமைத்தார்.
என்னவொரு அருமையான பாடல்கள் இத்திரைப்படத்தில். சீர்காழி கோவிந்தராஜன், டி ஆர் மஹாலிங்கம், எஸ் வரலக்ஷ்மி போன்ற பெருமைமிகு பாடகர்கள்.
காலத்தை கடந்து நிற்கும் அனைத்து பாடல்களையும் கேட்டு ரசிக்க
தந்தையும் தாயும் போல் அவன் இருப்பான் – ஒரு
தந்தையும் தாயும் அவனுக்கில்லை
அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில்
அவனன்றி எதுவுமே நடப்பதில்லை
கவிஞரை மீற எவர் உளர் !
சங்கர் கணேஷ் நிறைய நல் இசையை இவ்வாண்டில் தந்தனர்.
ஜெய், ஜெயலலிதா நடித்த 'வந்தாலே மகராசி' படத்தில் டி எம் எஸ்ஸுடன் ஜெயலலிதா இணைந்து பாடிய இந்த பாடல்.
'நத்தையில் முத்து' சீர்காழி கோவிந்தராஜன் ராதா ஜெயலக்ஷ்மியுடன் இணைந்து பாடிய கருத்துள்ள பாடல்.
வாலி அருமையாக எழுதியுள்ளார் இந்த பாடலை. தற்போதைய நிலைக்கும் பொருந்தும்.
'சந்திக்கு சந்தி நின்று பேசுவோரால்
தேசம் சந்திக்கே வந்ததென்று ஆடு ராட்டே '
'உற்பத்தி பெருக்காமல் எந்த நாடும்
உலகில் உருப்பட்டதில்லை என்று ஆடு ராட்டே'
'இறைவன் இருக்கின்றான்' படத்தில் பாலு, சுசீலா டூயட், எத்தனை இனிமை.
'அம்மன் அருள்' திரைப்பட பாடல்கள்
ராதா ஜெயலட்சுமி குரலில்
மற்றுமொரு 70களின் பாலு சுசீலா கூட்டணி
'கோமாதா என் குலமாதா' சுசீலா அவர்களின் இரண்டு அருமையான பாடல்கள்.
வி குமார் இசை அமைத்த படங்களின் பாடல்களை இங்கே பார்ப்போம்.
'கட்டிலா தொட்டிலா'
சுசீலா அவர்களின் மயக்கும் குரலில்
'பெத்த மனம் பித்து'
என்னவொரு அருமையான மெலடி மற்றும் வரிகள்
'பெண்ணை நம்புங்கள்'
"பொன்வண்டு " இலங்கை வானொலியில் ஒலித்த இந்த பாடல்
வி குமார் பாலசந்தர் கூட்டணி இருவரின் முதல் படங்களிலும் இணைந்து நிறைய படங்களில் பணியாற்றினார். இது ஒரு வெற்றி கூட்டணி. நிறைய பாடல்கள் பிரபலம் இவர்கள் கூட்டணியில். இவர்கள் இணைந்த கடைசி படம் 'அரங்கேற்றம்'. இத்திரைப்படம் ஒரு பெரு வெற்றி பெற்றது கதை களத்திற்காகவும்,நடிகர்களின் பங்களிப்பிற்காகவும். வி குமார் அவர்களும் சோடை போகாமல் நல்ல வெற்றி பாடல்களை கொடுத்தார். சுசீலா அவர்கள் பாடிய 'ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது' 'மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே ம் முன்னேற்றம்' பாலுவுடன் 'ஆரம்ப காலத்தில்' எல் ஆர் ஈஸ்வரி பாடிய ' மாப்பிள்ளை ரஹஸ்யம் சொல்லவா'
கண்ணதாசனை விட்டு விட்டோமே. அடித்து ஆடி இருப்பார் எல்லா பாடல் வரிகளிலும்.
ஏ எம் ராஜா நிறைய இடைவெளிக்கு பிறகு கொடுத்த இந்த மெலடி ' வீட்டு மாப்பிள்ளை' படத்தில்.
இன்னும் இருக்கிறது. மெல்லிசை மன்னர் என்ன கொடுத்தார் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
அதுவரை மேற்கூறிய பாடல்களை கேட்டு மகிழவும்.
No comments:
Post a Comment