இந்த பதிவில் மெல்லிசை மன்னர் 1972ஆம் ஆண்டு என்ன பாடல்களை கொடுத்தார் என்பதை பார்ப்போம்.
அதற்கு முன்பு இந்த இரண்டு படங்களை சுருக்கமாக பார்ப்போம். ஜெய் லட்சுமி நடித்த 'கருந்தேள் கண்ணாயிரம்' மலையாள பிரபல இசை அமைப்பாளர் ஷியாம் அவர்களின் இசையில்
பாலு மனோரமா சதன் குரலில் மிக பிரபலமடைந்த 'பூந்தமல்லியில் ஒரு பொண்ணு பின்னாலே'
டி ஆர் பாப்பா அவர்கள் இசையில் 'அவசர கல்யாணம்' படத்தில் வந்த இந்த இனிமையான பாடல் சுசீலா அவர்கள் குரலில்
மெல்லிசை மன்னர் 1972
'பி மாதவன் அவர்கள் இயக்கத்தில் வெளி வந்த வெற்றியை பிரித்த 'ஞான ஒளி' 3 பாடல்கள் தான் மூன்றும் முத்தானவை . 'தேவனே என்னை பாருங்கள்' 'அம்மா பொண்ணு சும்மா சொல்லு ஆசை இல்லையோ' மணமேடை'
'மிஸ்டர் சம்பத்'
சோ அவர்களின் இயக்கத்தில் வெளி வந்த Mr சம்பத் படத்தில் இடம் பெற்ற 'ஆரம்பம் ஆகட்டும் உன்னிடம் தான்' பாலுவின் குரலில் மென்மையான பாடல்
'நவாப் நாற்காலி' படத்தில் எல் ஆர் ஈஸ்வரி அவர்கள் குரலில் இந்த பாடல் அருமையாக வந்தது.
'தர்மம் எங்கே' திரைப்படத்தில் வரும் 'பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே' என்னவொரு அருமையான பாடல், இடையில் வரும் கோரஸ் மற்றும் அந்த குழல்.
சி வி ராஜேந்திரன் இயக்கத்தில் வந்த மற்றுமொரு படம் 'நீதி'. இதில் பிரபலமான பாடல் 'நாளை முதல் குடிக்க மாட்டேன்'
மு க முத்து அவர்கள் குறைந்த படங்களே நடித்தார். அவர் நடித்த படங்களின் அனைத்து பாடல்களும் மிக பிரபலம். 'பிள்ளையோ பிள்ளை' அவர் அறிமுகமான முதல் படம். என்ன அருமையான பாடல்கள். மன்னர் யாருக்கும் குறை வைக்கவில்லை. எல்லோருக்கும் அவருடைய சிறப்பான இசையை தந்துள்ளார் என்பதை மு க முத்து நடித்த பட பாடல்களை கேட்டாலே அறியலாம்.
'திக்கு தெரியாத காட்டில்' என் சி சக்ரவர்த்தி அவர்களின் இயக்கத்தில் வந்த 'கேட்டதெல்லாம் நான் தருவேன்'
சுசீலா அம்மாவும் பாலுவும் தொடங்கும் அந்த ஹம்மிங்கிலேயே களை கட்டும் அந்த மெலடி
'கண்ணா நலமா'
கவிஞரின் அற்புதமான வரிகளில் டி எம் எஸ். பாத்தாலே கதையின் போக்கை கண்டுபிடித்து விடலாம்
'ராஜா'
நடிகர் பாலாஜி தயாரிப்பில் மற்றொமொரு வெற்றி படம். பாடல்கள் அனைத்தும் ஹிட்.
துள்ளலான ரிதம்
பாலு...உன்னை விட்டி வேறு யாரு இப்படி பாடுவார்
சுசீலா மாஸ்டர் கிளாஸ்
'ராமன் தேடிய சீதை'
அருமையான மெலடி இது. அலுங்காத இடையிசை..
ஹம்மிங் குயின் வசந்தா அவர்களின் மற்றொமொரு வெற்றி பாடல். கவிஞரின் வரிகள் எத்தனை உள்ளர்த்தங்கள்...
நான் தேடிய தலைவியோ?
'சங்கே முழங்கு' ப நீலகண்டன் இயக்கத்தில்
ஆற்று வெள்ளம் தானே ஓடும்
ஆசை வெள்ளம் சொந்தம் தேடும்
சொந்தம் ஏதும் இல்லை என்றால்
அந்த நேரம் நால்வர் வேண்டும்
நாலு பேருக்கு நன்றி
'தவப்புதல்வன்'
முக்தா பிலிம்ஸ் அவர்களிடமிருந்து வந்த இன்னொரு வெற்றி காவியம். இசை சம்பந்த களம் . மன்னர் அடித்து ஆட வசதியான களமிது . ஆனால் நிறைய பாடல்கள் இல்லாமல், கதையின் கருவை முன்னிறுத்தி கொடுத்த நான்கையும் மறக்கவியலா செய்து விட்டார்.
மன்னரின் இசை கேட்டால் எல்லாம் அசைந்தாடுமே ! இந்த பாடல் இன்றளவும் பிரபலம் என்பதற்கு தினம் நடக்கும் தொலைக்காட்சி மேடைகளில் ஒலிக்கிறது
வாலி அவர்களின் வரிகளில்....மணியான ஒரு பாடல்.
ஈஸ்வரி அம்மா அவர்களை தவிர யார் பாட முடியும்
'காசேதான் கடவுளடா'
இன்றும் இந்த திரைப்படம் வாரத்தில் ஒரு முறையாவது ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் ஒளி பரப்பப்படுகிறது.
ஒரு காமெடி படத்திற்கு என்ன ஒரு amazing பாடல்கள்.
ஆரம்பத்தில் ஸ்ருதி சேர்ப்பது போல் ஆரம்பித்து ட்ரம்ஸ் அதிர பல்லவி தொடங்க, இடை இசையில் பேஸ் கிட்டார் fusion சரணத்தில் இலகுவாக இணையும் தபேலா.என்னவொரு அற்புதமான இசை கோர்ப்பு
பாடல் ஒரு சாமியார் பூஜை காலம்..மெட்டு மற்றும் orchestration, simply out of the world. வாலி வேறு வரிகளில் விஷமத்துடன் விளையாட. ஒரு காலத்தால் அழியாத பாடல் இது.
இந்த வகையான பாடல்கள் ஈஸ்வரி அம்மா தான் பாடுவார், ஆனால் மன்னரோ மாற்றி யோசித்து இந்த படத்தில் சுசீலா பாடலை ஈஸ்வரி அவர்களுக்கும், ஈஸ்வரி பாடும் item genre வகையை சுசீலா அம்மாவை பாட வைத்துள்ளார்.
இந்த பாடலில் வரும் அந்த அலட்சியமான ஹம்மிங், பல்லவிக்கு பிறகு வரும் அந்த இடை இசை...எங்கெங்கோ கண்டு போகுதம்மா
என்ன ஒரு மெலடி.,குறிப்பாக அந்த பல்லவிக்கு பிறகு 1.06 - 1.10 வரும் அந்த இசை கோர்ப்பு, 1.29 - 1.31 அந்த ஹம்மிங், 'கேட்கக்கூடாது' என்பதை ஒரு கிண்டலாக சரணத்தில் வரும் 'மாலை நேரத்தில்' பாடும் ஸ்டைல்..ஈஸ்வரி அம்மா is a legend
மன்னர், ஏ எல் ராகவன் மற்றும் வீரமணி அவர்களுடன் பாடும் குதூகல பாடல்.
'பட்டிக்காடா பட்டணமா'
பட்டிக்காட்டில் மட்டுமில்லாமல் பட்டணத்திலும் பட்டையை கிளப்பிய படம், பாடல்கள். இந்த பாடல்களுக்கு ஆடாத திரை அரங்குகள் இல்லை என்று சொல்லலாம்.
என்னவொரு ஆட்டம். இந்த பாடல் இன்றும் பிரபலம் என்பதற்கு இன்றளவும் எல்லாம் நிகழ்ச்சிகளிலும் பாடுவது சில ரீமிக்ஸ் செய்யப்பட்டவையுமே சான்று
குத்து மட்டுமில்லாமல் ராக் பாடலையும் பின்னி பெடலெடுத்தார். முதல் இடை இசையில் வரும் அந்த கிடார்,ட்ரெம்பெட் ..வாவ்
அடுத்த பாடல், உடுக்கை மற்றும் கிராமத்து திருவிழாக்களில் இசைக்கும் கருவிகளை வைத்து...டி எம் எஸ்...அவர் அவரேதான்
இன்னும் முடியவில்லை, இதோ ஒரு fusion ..மன்னரே நீங்கள் நிஜமாகவே மன்னர்தான்.
ஈஸ்வரி அம்மா அவர்களுக்கென்றே அமையும் பாடல்கள்..
ஆஹா என்னவொரு அருமையான இசை கோர்ப்புகள், காலத்தால் அழியாத இன்றளவும் அனைவரும் கேட்கும் பாடல்கள்.
சுதந்திரம் பெற்ற பின்னரும் மன்னராட்சி தான் நமக்கு :-)
இத்தனையும் பார்த்த பிறகும் ஆரம்ப 70களின் திரை இசை தேங்கி நின்றது என்ற வாதம் முன் வைக்கபடும்மா?
இன்னும் இரண்டொரு ஆண்டுகள் நாம் காண இருக்கின்றனவே :-)
மீண்டும் சந்திப்போம் !
No comments:
Post a Comment