நீண்டநாட்களுக்கு பிறகு இந்த பக்கம் வருவதற்கு ஒரு வாய்ப்பு ஆனால் மனது கொஞ்சம் சங்கடபடுகிறது.
நேற்று எந்திரன் திரைப்படம் பார்த்தபிறகு இதை கண்டிப்பாக எழுத வேண்டும் என்று தோன்றியது.
ஷங்கர் இந்த திரைப்படத்திற்காக ௧0 வருடமாக உழைத்து வந்து இருப்பதாக எல்லா உரையாடல்களிலும் கூறி வருகிறார்.மற்றும் சன் டிவி மூலமாகதான் இது நிறைவேறி இருப்பதாகவும் கூறுகிறார்.
நன்றி மறப்பது நன்றன்று என்பதை யார் ஷங்கருக்கு நினைவு படுத்துவார்கள். சுஜாதா என்கிற ஒரு மிக பெரிய எழுத்தாளார் இல்லாமல் இருந்து இருந்தால் இந்த படம் சாத்தியமா என்று ஒரு நிமிடம் சிந்திக்கட்டும்.
இந்த கதை அவருடையது இல்லை என்றாலும் கருவை சுமந்தவர் அவர். இது வரை ஒருவாறு அவரை பற்றி ஒரு வரி குறிப்பிடாதது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.
பி கு : இனிமேல் கொஞ்சம் எழுத முயற்சி செய்யலாம் என்று இருக்கிறேன், முடிந்த வரை.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
neriya ezhuthunga thala vaazthukkal..:)
Post a Comment