Tuesday, May 2, 2023

A myth about early 70s Tamil Film Music - VIII (Year 1974) - Part II

 நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த இழையில். கடந்த இரண்டு ஆண்டு இடைவெளியில் நிறைய நடக்ககூடாத நிகழ்வுகளால் இந்த இழையை தொடர முடியவில்லை. 


https://vr-alaymanlostinmusic.blogspot.com/2021/03/a-myth-about-early-70s-tamil-film-music_23.html


மேற்குறிப்பிட்ட சுட்டியியை படித்து விட்டு இந்த இழையை தொடருவோம்.


1974  ஆம் ஆண்டு இரண்டாம் பாகத்தில் மன்னர், எம்ஜிஆர், வி குமார் மற்றும் வாணி ஜெயராம் அவர்களின் பங்களிப்பை பார்ப்போம் என குறிப்பிட்டு இருந்தோம். யாரும் நினைக்கவில்லை, தற்போது வாணி அவர்கள் நம்மிடையே இல்லை என்பதை :-(. 


வாணி ஜெயராம் :


தீர்க்க சுமங்கலி என்ற படத்தில் இடம் பெற்ற 'மல்லிகை என்ன மன்னன் மயங்கும்' என்ற பாடலுடன்  (முன்னமே தமிழில் பாடி இருந்தாலும்) தமிழக இசை ரசிகர்கள் மனதில் குடி கொண்டார் வாணி அவர்கள். 






இதில் ஆரம்பித்த அவர் இசை பயணம் அந்த வருடத்திலேயே இன்னும் பல அருமையான பாடல்களை கேட்க நாம் கொடுத்து வைத்துஇருந்தோம்.


'எங்கம்மா சபதம்' ஜே கே வெங்கடேஷ் இசையில் 'அன்பு மேகமே இங்கு ஓடி வா', 'திக்கற்ற பார்வதியின்' சிட்டி பாபு அவர்களின் இசையில் இரண்டு பாடல்கள், 'சிரித்து  வாழ வேண்டும்' 'தங்கப்பதக்கம்' என்று அவருடைய பயணம் தொடர்ந்தது.








வி  குமார் 


குமார் அவர்களுக்கு இந்த வருடம் கொஞ்சம் இறங்கு முகம். 'அவளும் பெண் தானே, ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணே கண்ணு, தாய் பாசம் போன்ற படங்களுக்கு இசை அமைத்தாலும் அவர் தனித்து தெரிந்தது 'ராஜ நாகம்' படத்தில் ' தேவன் வேதமும்' மற்றும் ' மாணவன் நினைத்தால்' பாடல்களில்.






எம்ஜிஆர் 


'நேற்று இன்று நாளை' மற்றும் 'சிரித்து வாழ வேண்டும்' ' உரிமைக்குரல்' என  வெற்றிப்படங்கள் எம்ஜிஆர் நடித்தவை. நடிகர்  அசோகன் சொந்த தயாரிப்பில் வந்த 'நேற்று இன்று நாளை' படத்தில் அனைத்து பாடல்களும் அருமை. இளமையான பாலுவின் குரலில் 'பாடும் போது நான் தென்றல் காற்று' 'அங்கே வருவது யாரோ' , பாடகர் நிலைகளும் தன பங்கிற்கு ' நீ என்னனென்ன சொன்னாலும் இனிமை' என கொஞ்ச, நமக்கு கிடைத்ததோ மெல்லிசை மன்னர் கொடுத்த அற்புதமான பாடல்கள்.




பாடலின் ஆரம்பத்தில் வரும் துள்ளல் இசையும், பாலு மற்றும் ஜானகியின் இளமையான ஹம்மிங்...




அடுத்து எஸ் எஸ் பாலன் அவர்கள் இயக்கத்தில் வந்த 'சிரித்து வாழ வேண்டும்' படத்தின் பாடல்கள். அற்புதமான சாரங்கா ராகத்தில் அமைந்த 'கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்' பாடலில் நம்மை எல்லாம் மறக்க வைத்தார் மெல்லிசை மன்னர். வாணி அவர்களின் குரலில் 'பொன்மன செம்மலை புண்பட செய்தது யாரோ' அருமையான மெலடி.







'உரிமைக்குரல்' இயக்குநர் ஸ்ரீதர் அவர்கள் இயக்கத்தில் வந்த இந்த படத்தின் பாடல்களுக்கு மெல்லிசை தந்தவர் மன்னர். அந்த 'கல்யாண வளையோசை ' கவிஞர் லதா அவர்களின் விழியில் கவிதை எழுதியதையும் இன்னும் மறக்க முடியுமா.

அனுபல்லவியில் 'மாமன் என் மாமன்' என்று குழையும் லாவகம்




பல்லவி முடிந்தவுடன் வரும் அந்த குழல், சுசீலா அனுபல்லவியை தொடரும் இடம்...ஆஹா..என்னவொரு ஆனந்தம்




இயக்குனர் சிகரம் கே பாலசந்தர் இரண்டு படங்களை  இயக்கினார். இரண்டும் வெற்றி படமாக அமைந்தது. ஜெமினி நடித்த 'நான் அவனில்லை ' மற்றும் ' எம் எஸ் பெருமாள் எழுதிய 'அவர் ஒரு தொடர்கதை' . அவள் ஒரு தொடர்கதை தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு தனி இடத்தை பிடித்தது. 

சுஜாதா அவர்களின் சிறந்த படங்களை பட்டியலிட்டால் இந்த படம் தவறாமல் முதல் இடம் பிடிக்கும். 

இவ்விரு படங்களுக்கும் இசை மெல்லிசை மன்னர் அவர்கள். அடித்து ஆடி இருப்பார்.

ஈஸ்வரி அவர்களின் 'அடி என்னடி உலகம்' ஜானகியின் 'கண்ணிலே என்ன உண்டு' சுசீலா அவர்களின் தாலாட்டு ' ஆடுமாடு தொட்டில் இங்கு' கான கந்தர்வனின் ' தெய்வம் தந்த வீடு' ....

பாலு மற்றும் சாய்பாபா அவர்களில் கூட்டணியில் அதகளம் செய்யும் அந்த மிமிகிரி பாடல் 'கடவுள் அமைத்து வாய்த்த மேடை'

என்னவொரு அற்புதமான இசை.


கவிஞர் கவிஞர் தான் 



பாட்டிலே கதை சொல்லும் கவிஞர் 




ஜானகி :-)



ராமாயணத்தை நாலே வரிகளில்  :-) Only LRE can nail this.



'நான் அவனில்லை' இந்த ஜெயச்சந்திரன் ஈஸ்வரி ஜோடி என்னவொரு ஆனந்தம். 



70களின் பாலு எல்லாம் உயர் ரகம் 


இந்த ஆண்டை பொறுத்தவரை, மெல்லிசை மன்னரை ஆண்டாக அமைந்தது. மேற்குறிப்பிட்ட படங்களையும் சேர்த்து நிறைய படங்களுக்கு நல்இசையை வழங்கினார். சிவாஜி அவர்களுக்காக 'தங்கப்பதக்கம், அன்பை தேடி, தாய், சிவகாமியின் செல்வன், என் மகன்  மற்றும் ஜெய்சங்கர், சிவகுமார், ஏ வி எம் ராஜன் படங்களுக்கும். இந்த வருடம் பாலுவுக்கு ஒரு குறிப்பிட்ட ஆண்டாக அமைந்தது.

இதை பற்றி அடுத்த  பதிவில் பார்ப்போம்.


1 comment:

G.Ragavan said...

Perfect list. 1974 was certainly a music riot year in TFM unlike it is projected some vested interest group. Your post is a perfect synopsis for 1974 TFM and a good eye opener for regular music lovers.