Friday, July 19, 2013

மாசறு பொன்னே : வாலி

மூன்று எழுத்தில் என் மூச்சிருக்கும் என்று எழுதியவரின் மூச்சு நின்று விட்டது. இன்னொரு இழப்பு ஸ்ரீ ரங்கத்துக்கு :-( ஊர் பாசம் அதிகம் மனது வலிக்கிறது. ஸ்ரீ ரங்கத்தில் இன்னொரு ரங்கராஜனோடு (எழுத்தாளர் சுஜாதா) சேர்ந்து இந்த ரங்கராஜன் கையெழுத்து பத்திரிக்கையில் கதை,கட்டுரைகள் எழுதி உள்ளார் .
TMS மூலம் திரை உலகிற்கு அறிமுகமாகி முதலில் எழுதியது "சிரிகின்றான் இவன் சிரிகின்றான்". இன்று அழத்தான் முடிகிறது.
இவரின் அம்மா பாசம் அளவிடமுடியாதது. அம்மா என்றால் அன்பு, அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே, நானாக நானில்லை தாயே வரை நீண்டது.

இராமாயணத்தில் வாலி மற்றும் ராமசந்திரன் இடையே எத்தகைய உறவு இருந்தது என்பதை நாம் கண் கூடாக கண்டதில்லை. ஆனால் இந்த வாலிக்கும் (MG ) ராமசந்திரன் இடையே இருந்த நட்பு...... நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் தொடங்கி,இவர்கள் இருவரும் தொட்டால் பூ மலர்ந்தது (தொட்டால் பூ மலரும்), கண் போன போக்கிலே கால் போனது (பணம் படைத்தவன்).

கணேசனையும் விட்டு வைக்கவில்லை இவர். இதோ எந்தன் தெய்வம் முன்னாலே என்று நம் முன் நிறுத்தி இருவரும் நம் கண்களை குளமாக்குகிரார்கள்.

காலத்தை கடந்து நிகழ்காலத்திற்கும் தன்னை அடையாளபடுத்தி கொண்டார். உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் (கமல்), பழமுதிர் சோலை (கார்த்திக்), கொஞ்ச நாள் பொறு தலைவா (அஜித் ) போன்று காலத்துடன் கை கோர்த்தார்.

கோல முகமும் குறு நகையும் குளிர் நிலவென நீல விழியும் பிறைநுதலும் விளங்கேடுமெனில் நீலியென சூலியென தமிழ் மறை தொழும் , எங்கள் மாசறு பொன்னே .....
அற்புதமான பாடல் தேவர் மகனுக்காக.

பக்தியில் சற்றும் சளைத்தவர் இல்லை. இராமயணத்தை இரத்தின சுருக்கமாக, பல்லவி,அனு பல்லவி மற்றும் முதல் சரணங்களில் அமைத்த, ஸ்ரீ ராம நாம ஒரு வேதமே (ஸ்ரீ இராகவேந்திரர் ) ஒன்றே சாட்சி.

ராப் மற்றும் டிஸ்கோ நடனங்கள் பிரபலம் ஆகிய கால கட்டங்களில் கூட தனி கோடியை உயர பறக்க வைத்தார். சிக்கு சிக்கு புக்கு ரயிலே, முக்கால முக்காபுலா, சின்ன ராசாவே சிதேறேம்பு என்னை கடிக்குது போன்ற பாடல்களில் மூலம் அந்த அந்த கால கட்டத்தில் வாழ்ந்தார்.

ரஜினியின் சிவாஜி படத்தில் ஒரு பாடல், தீ தீ தீ ஜெக ஜோதி ஜோதி... தளபதி வெடி ஜாதி ஜாதி என்று எழுதி விட்டு நிமிர்தவர் அடுத்து என்ன எழுதுவார் என்றே எல்லோரும் அவர் முகத்தையே பார்க்க வந்து விழுந்தன
வரிகள் , பில்லா ரங்கா பாஷா தான் என் பிஸ்டல் பேசும் பேஷா தான்....அறையில் அப்ளாஸ் அடங்க நேரமாயிற்று .

எல்லா காலங்களிலும் relevant ஆகா இருந்தவர்.

தாயாலே வந்தது தீயாலே வெந்தது என்று தனக்கே இரங்கற்பா எழுதி உள்ளார்.

அந்த மாசறு பொன் இன்று மறைந்து விட்டார். வானுலகம் அவர் புகழ் பாட அவரை அழைத்து கொண்டதோ என்னவோ . என்னை பொறுத்தவரை இனிமேல் தான் அவர் வாழ போகிறார் இப்பூவுலகில்.
 http://youtu.be/XTJpbcFyN_I